பக்கம்:வள்ளலார் யார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத் தேன்

23


மணிவாசகர் இறைவனேயே தேனுய் இன்னமு. தாய்த் தித்திக்கும் சிவபெருமான் என்று உளங் கனிந்து பாடியவர். அவர் பாடியருளிய தேனூறு வாசகங்கள் அறுநூறும் தமிழ்த்தேன்’ என்றே தலைக்கொண்டு போற்றும் தனிமாண்புடையன. திருவாசகம் என்னும் தேன்' என்றே பாராட்டினர் ஒருவர். திருவிடை மரு துாரில் மருதிடை யமர்ந்த பெருமானே மாணிக்கவாச கர் ஆனந்தத்தேன்’ என்றே குறித்தருளினர். அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ' என்று பாடியருளினர்.

மருதிடை உறைந்த பெருமானகிய ஆனந்தத் தேனே அகங் குளிர வழிபட்ட தமிழ் வேந்தராகிய காவுக்கரசர், கனியினும் கரும்பினும் காரிகையாரினும் தனி முடி அணிந்தாளும் அரசினும் இனியன் அவ் இடை மருதீசன் என்று கூறி இன்புற்ருர்.

நெல்லே நாட்டின் தெய்வக்கவிஞராகிய குமரகுரு பர அடிகளார், தில்லைப் பொன்னம்பலத் திருக்கூத் தனத் தரிசித்தார். அப்பெருமான் ஆடல் புரியும் பொன்னம்பலம் பொற்ருமரைபோல அவர் விழிகட்கு விளங்கிற்று. அதன்கண் ஆனந்தக் கூத்தாடும் பெரு மான் திருமேனி ஆனந்தத் தேளுகத் திகழ்ந்தது. அரு. கில் கின்று பெருமானது பேரழகைப் பருகி நிற்கும் திரு. வாட்டி சிவகாமியன்னேயின் கருவிழிகள், அத்தேனே உண்டு களிக்கும் களிவண்டுகளாகக் காட்சியளித்தன. தாமும் அவ் அருள்தேனே ஆரப் பருகினர் அடிகளார். அவரது உள்ளத் தாமரையில் கவிதைத்தேன் ஊறியது. அதனை உலகினர்க்கு உவந்து வழங்கினர்.

'பொன்மன்றம் பொற்ரு மரையொக்கும் அம்மன்றில்

செம்மல் திருமேனி தேனுெக்கும் அத்தேனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/25&oldid=991877" இலிருந்து மீள்விக்கப்பட்டது