பக்கம்:வள்ளலார் யார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வள்ளலார் யார்?

________________

வள்ளலார் யார் ? வருளால் நிறைமொழியாளர் பலர் தோன்றிச் சைவத் தைக் த்தனர். அவர்கள் தம் பாவன்மை 5வன் FOLDகளால் சிவநெறியின் சிறப்புக்களை மக்களிடையே பரப்பு நிலைநாட்டினர். அங்ஙனம் சைவத்தைக் காத் தற்கென்றே தோன் றியருளிய தெய்வப் பெரியார்களில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் சமயாசாரியர் நால்வரு மாவர். இவர்கள் உலகில் ‘வந்திலரேல் நீறெங்கே ? மாமறைநூல் தான் எங்கே? எந்தைபிரான் ஐந்தெழுத்(து) எங்கே?' என்று வினவினார் ஒரு சமயப் பேரறிஞர். 1. அத்தகைய திருவருள் நலஞ்சான்ற வித்தகர் நால் வருள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரப் பாக்களால் தெருவெல்லாம் - சிவமணம் கமழச் செய்தனர். சம்பந்தரும் அப்பரும் ஒரே காலத் தில் இருந்து சிறந்த சிவப்பணியாற்றிய தவப்பெருஞ் செல்வர்கள். அவர்கள் இருவரும் பற்பல சிவத்தலங்: களுக்கு எழுந்தருளி இறைவனைப் போற்றிப் பொற் புடைய பதிகங்களைப் பாடினர். இவர்களுடன் திருநீல கண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழிசை வல்லாரும் அவர் மனைவியா ராகிய கூத்தில் வல்ல மதங்கசூளா மணியாரும் சென்று சிவப்பணிக்குத் துணைபுரிந்தனர். சம்பந்தரும் அப்பரும் பாடியருளிய . மாலைகளையெல்' லாம். பாணர் யாழில் பண்ணமைய இசைத்துக் கேட் பவர் உள்ளம் கிளர்ச்சி கொள்ளச் செய்தனர். அப்பாடல்களின் கருத்துக்களைப் பாமரரும் உணர்ந்து இன் புறும் வண்ணம் மதங்கசூளாமணியார் அவிநயம் பிடித்து நாட்டியமாடிக் காட்டினார். இவ்வாறு சம்பந் தரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மதங்க சூளாமணி' போரும் முறையே இயல், இசை, நாடகமாகிய முத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/28&oldid=1421467" இலிருந்து மீள்விக்கப்பட்டது