பக்கம்:வள்ளலார் யார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வள்ளலார் யார்?


கற்பவர் உள்ளமெல்லாம் தித்திக்க அள்ளுறும் தெள் ளமுதமாகத் திகழ்கின்றன. இவரது திருவாசகத் தேனுடன் மூவர் தமிழாகிய தேவாரப் பாகும் சேர்ந்தே நால்வர் செய்த நற்றமிழாயிற்று.

சைவம் காக்க வந்த தெய்வக் கவிஞர்களாகிய இக் நால்வர் செய்த நற்றமிழினை இசைவல்ல நல்லறிஞர் ஒருவர் யாழொலி, குழலொவி முதலாய பல வகை வாத்தியங்கள் கலந்து முழங்கப் பண்ணுடன் குழைத் துப் பரவசமாகப் பாடிக்கொண்டிருந்தார். இந்த இசைக்குழுவின் இன்னிசை முழக்கில் எண்ணில்லாத மக்கள் மனத்தைப் பறிகொடுத்து இன்பவெள்ளத்தில்

ஆழ்ந்திருந்தனர்.

இந்தக் காட்சியினே அப்பக்கமாக வந்த அருட்பிர காச வள்ளலார் கண்ணுற்ருர், திடீரென்று அக் கூட்டத்திலிருந்து பெண்ணுெருத்தி எழுந்தாள். அவள் தன் கணவன் இருந்த பக்கத்தை நோக்கிள்ை. அவனும் தற்செயலாக அவள் இருந்த பக்கத்தைப் பார்த்தவன் அவள் எழுந்து கிற்பதையும் தெரிந்துகொண்டான். அவள் கண்சாடை காட்டிப் புறப்படு என்ருள். அவனுக்கோ அந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே மனமில்லை. அவளோ, நீ இப்போது என்னுடன் வரவில்லையென்ருல் உனக்கு உணவு கிடையாது; கதவைத் தாழிட்டு வீட்டுள் படுத்துக்கொள்வேன் ;பின்பு பசியுடன் வந்து வெளித்திண்ணையில்தான் படுத்துக் கிடக்கவேண்டும்” என்று குறிப்பாக அறி வித்தாள். அவள் சினத்திற்கு ஆளாக அஞ்சிய அவ் ஆண்மகன் மெல்ல எழுந்து கடந்தான். ஆனல் அவனது உள்ளம், கால்வர் செய்த கற்றமிழைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/30&oldid=991835" இலிருந்து மீள்விக்கப்பட்டது