பக்கம்:வள்ளலார் யார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வள்ளலார் யார்?


இனக் கரையேற்றிக் கருணைபுரிவாய் ! என்று அம்பலக் கூத்தனே அடிபணிந்து வேண்டுகின்ருர். -

"சீர்தரு நாவுக் கரையரைப்

போல் இச் சிறிய னும்ஒர் கார்தரு மாயைச் சமணுல்

மனக்கருங் கல்லிற் கட்டிப் பார்தரு பாவக் கடலிடை

வீழ்த்திடப் பட்டு முன்றே ஏர்தரும் ஐந்தெழுத்(து) ஒதுகின்

றேன் கரையேற்(று) அரசே! என்பது வள்ளலாரின் உள்ளுருக்கும் தெள்ளமுதத் திருவருட்பாவாகும். இதல்ை அருள்வள்ளலார், இறை வன் திருநாமம் ஒன்றே பிறவிக்கடலினின்று கரையேறப் பெருந்துணை செய்வது என்பதை நன்கு வலியுறுத்தி

புள்ளார்.

அ. தணிகைக் காதல்

குன்றுதோருடும் குமரவேளுக்குத் திருத்தணி கைப் பெருமலேயும் ஓர் உை றவிடமாகும். சூரன் குலத்தை வேருடன் அறுத்த வீரனுகிய வேலன் தனது வெஞ்சினம் தணிந்து வீற்றிருந்த இடமாதலின் அம் மலே தணிகைமலை என்னும் தனிப்பெயர் தாங்கியது. அனிவேல் தாங்கிய அத் தணிகை முருகன்மீது அருட் பிரகாச வள்ளலார் தணியாத காதல் கொண்டார், அப் பெருமானத் தரிசித்து மகிழப் பெருங்காதல் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/36&oldid=991838" இலிருந்து மீள்விக்கப்பட்டது