பக்கம்:வள்ளலார் யார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தணிகைக் காத்ல் 岔莎

அவர் தம் இளமைப்பருவத்தில் கிலேக்கண்ணுடி

$

யில் அத் தணிகை முருகனைக் காண்டற்குப் பன்னுட்

ó洽T语”、 ಟಿಆಣp. து வேண்டினர். ஒரு நாள் பெரு மானது காட்சி அவருக்குக் கிடைத்துவிட்டது. அவனது சீர்கொண்ட வதனங்கள் ஆறனேயும் கண்டு களித்தார்; கடப்பந் தார் கொண்ட பன்னிரு தோன் களேயும் பார்த்து மகிழ்ந்தார்; அவனது தாமரைத் தாள்களைத் தரிசித்து இன்புற்ருர் , அவன் திருக்கரம் ஏந்திய கூர்வேலேயும் கோழிக் கொடியையும் கூர்ந்து நோக்கினர்; அவனது அருவேப்போன்று கார்மேகங்கள் சூழ்ந்து விளங்கும் தணிகைமலையையும் கண்ணுற்ருர்.

இங்ஙனம் தணிகைப் பெருமானது தண்ணருள் காட்சியைக் கண்டு தரிசித்த கருணைப் பெருமாளுகிய இராமலிங்கர், பெருமானே! உன் திருக்கோலம் கானும் காதலால் எத்தனை நாட்களாக ஏங்கிக் கதறு கிறேன். இத்தனே காலமாக ஏழையேனுக்கு இரங் காது காலத்தாழ்வு செய்ததன் காரணம் என்னவோ? ேேயா பல்வேறு காதலேயும் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரம்பொருள். அடியேனே ஒரு காதலேயும் உணராத சிறுவன். இவ் எளியேன் ஈரமில்லாத ஈன்ஸ் பால் சென்று இரந்து இழிவெய்துமாறு விட்டு விடாதே!” என்று பலவாறு வேண்டிப் பாடினர்.

ஒருகால் தாம் கண்ணுற்ற அப்புண்ணியக் காட்சியை மீண்டும் காட்டியருள வேண்டும் என்று பலகால் பரவி வேண்டுகின்ருர். முருகனே அழகே உருவாகத் திரண்ட பெருமான் என்றும் இளமை குன்ருத எழிலுடன் இலங்கும் திருமேனியுடையான். அவனுடைய அழகிற்கு உவமை சொல்ல எவராலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/37&oldid=644418" இலிருந்து மீள்விக்கப்பட்டது