பக்கம்:வள்ளலார் யார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயனே யான் 亭懿

சென்று துணைபுரிந்தருளும் இணையிலா ஈசனே என் னென்று பாராட்டுவது அவன் உயிர்களிடத்துச் செய் யும் பேரன்புக்கு உலகில் தலையாய தாயன்பைத் தவிர வேறு எதனே ஒப்பாகக் கூற முடியும் அதனுலேயே உள்ளமும் ஊனும் உயிரும் கரைந்து உருகுமாறு திரு வாசகத்தைப் பாடியருளிய மணிவாசகளுர்,

பால்கினங் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியே னுடைய ஊனின உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய தேனினச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே சிவபெரு மானே ! - யான் உனத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுங் தருளுவ திணியே? என்று பாடியருளினர். தாயிற் சிறந்த தயாவான தத் துவனே என்றும் அவனது அளவிலா அன்டை: வியந்து போற்றினர்.

இத்தகைய திருவாசகத் தேனைப் பருகிப் பருகித் திளேத்த அருட்பிரகாசராகிய இராமலிங்க அடிகளார். இறைவனது அன்பிற்கு இணையிலாத தன்மையை இனிது புலப்படுத்தினர். உள்ளன்பு கொண்ட ஓராயி ரம் தாயர் கூடிலுைம் இறைவனகிய தாய்க்கு ஒப்பா கார் என்று உரைத்தருளினர்.

'அன்புடைய தாயர்கள் ஓராயிரம்பேர் ஆணுலும்

அன்புடைய நின்னைப்போல் ஆவாரோ? என்று வியந்து புகழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/43&oldid=644432" இலிருந்து மீள்விக்கப்பட்டது