பக்கம்:வள்ளலார் யார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கo. கண்ணியில் பட்ட கலைமான்


மன்னர் குலத்திற் பிறந்த இளங்காளேயர்க்கு மான் வேட்டையாடுதல் ஓர் இன்ப விளையாட்டு, இன்பப் பொழுதுபோக்கிற்காகக் காட்டகம் புகுந்து வேட்டையாட முனேந்த வீர இளைஞர்க்கு மானேக் கண்டு விட்டால் பெருமகிழ்ச்சிதான். வில்லேந்தி வேட்டையாடிய பண்டை நாளில் மானேக் கண்டதும், அவர்கள் அதன் மீது அம்பை எய்வர். குறி தப்பிவிட் டால் மானே விரட்டிக் கொண்டு அதன் பின்னரேயே ஒடிப் பற்றுதற்கு முயல்வர்.

காட்டில் வாழும் வேட்டுவரோ, தம் உணவின் பொருட்டு மானேப் பிடிக்க முயல்வர். அதற்காக வில் லேக்தி மானே விரட்டிக் கொண்டு செல்லமாட்டார். எங்கேனும் புதர் நிறைந்த ஒரிடத்தே கண்ணியை விரித்துக், கூட்டமாகத் திரண்டுவரும் மான்களைக் கண்டால் அவற்றை அக்கண்ணியின் பக்கமாக விரட்டி வீழ்த்துவர். மருண்டோடி வந்த மான்களில் ஒன்றி ரண்டு கண்ணியில் விழுந்துவிடும். கண்ணியிற் பட்ட் கலைமான், தனது பிணைமானைப் பற்றி, எண்ணுத எண் னமெல்லாம் எண்ணிப் புண்ணுய் உலேந்து புழுவாய்த் துடிக்கும். மருண்ட விழியுடன் அம்மான், கண்ணி யுள் கிடந்து புரண்டு கதறும். அதனுடைய துன்பத் திற்கு ஒர் எல்லேயே சொல்ல முடியாது. -

மான் வேட்டையாடப் புகுந்த மன்னர் குமாரரோ மானே வகளத்துப் பிடித்துவிட்டால், அதற்கு அரண் மனே வாழ்வும் அளவிலா ஆதரவும் கிடைத்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/44&oldid=991843" இலிருந்து மீள்விக்கப்பட்டது