பக்கம்:வள்ளலார் யார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் ஒரு திருநாள் 誌隠

இனிது கடத்துவதற்கேற்ற நல்ல பண்புகளையுடைய கங்கையாகவும், விருந்தி: ரும் தானும் விரும்பியுண்ணு தற்கேற்ற சுவைமிகுந்த இனிய உணவைச் சமைக்கும் ஆற்றல் படைத்தவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் பொருத்தமாகும். சுவை யான உணவைச் சமைத்து ஊட்டும் திறனுல் கணவன் விருப்பைப் பெருக்கி மகிழும் மாதராரும் உளர்.

{ བན་ཆ། ,༨ན་ * . . . *. -- 38 மனயறத்தை ஏற்கும் தக்க பருவமுற்ற ஆண்மக னும் பெண்மகளும் கூடி மணம் பெறுதற்கு முற்படும் ஒரு நாளே மக்கள் வாழ்வில் ஒரு திருகாளாகும். அது தான் திருமண கன்னுள் எனப்படும். பூத்த புதுமலர் கறுமணம் பரப்பத் தொடங்குவதுபோலப் பூப்புற்ற பெண் மணம் கமழத் தொடங்கும் பொன்னுள் அக் நாள். அந்த நாளைப் பருவக் காளேயரும் பருவ மங்கை யரும் பேராவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

வாழ்நாள் முழுதும் திருமண அழகராகவே திகழ்ந்த ஆலாலசுந்தரருக்கு வாழ்வில் இத்தகைய திரு நாள் மும்முறை வந்தது. ஆல்ை முதல்முறை நடை பெற்ற திருமணம் பெருங்குழப்பத்தில் முடிந்தது. அந்த மணம் நடைபெறவில்லை. புத்துளர்ச் சடங்கவி சிவாசாரியார் மகளை மணம் புரிந்து கொள்ளச் சென்ற இடத்தில் பெண்ணிற்கு மங்கல நாண் பூட்டுவதற்கு முன்பே பழுத்த கிழவர் ஒருவர் மனப்பந்தலிற் புகுந்து பெருத்த குழப்பத்தை விளேத்தார். சிவபெருமானே அங்ஙனம் ஆலாலசுந்தரரைத் தடுத்தாட் கொள்ள வங் தார்.

அருட்பிரகாச வள்ளலாராகிய இராமலிங்கப் பெருமானுக்கும் வாழ்வில் ஒரு திருநாளாகிய திருமண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/55&oldid=644459" இலிருந்து மீள்விக்கப்பட்டது