பக்கம்:வள்ளலார் யார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வள்ளலார் யார்?


'உணில் உண்க என்று மேலும் பணிவுடனும் கனிவு டனும் கூறினர். அது கேட்ட களிமகன் மகிழ்வுடன் மேலும் குடித்தான், களிமயக்கால் அறிவிழந்து தரை யிற் கிடந்து புரண்டான். தெருவிற் புரளும் அக்களி மகனேப் பார்த்தவர் எல்லோரும் குடிகாரன்! குடி காரன்' என்று பழித்து இகழ்ந்தனர். சிறிது நேரத் தில் அறிவு தெளிந்து எழுத்தான் அக்குடியன். கண்ட வர் வெறுக்குமாறு அலங்கோலமாகக் கிடந்த அவனே வள்ளுவர் தம் கரங்களால் எடுத்து உட்காரவைத்து, 'இந்த இழிகிலே உனக்கு எதனுல் ஏற்பட்டது தெரி யுமா? எல்லாம் நீ குடித்த கள்ளால்தான்; நல்லவர் கள் உன்னை மதிக்க வேண்டும் என்று எண்ணினல் இந்தச் செயலே அறவே விட்டொழிப்பாய்' என்று அன்புடன் வேண்டினர்.

உண்ணற்க கள்ளை, உணில் உண்க, சான்ருேரான் எண்ணப் படவேண்டா தார்’

என்பது அவருடைய பண்பட்ட டொன்மொழியாகும்.

பொல்லாத பிள்ளேயாக இருந்தாலும் பெற்றதாய் அப்பிள்ளையை வெறுப்பதில்லை. அந்தப் பிள்ளே எந்தத் திச்செயலைச் செய்ததாகப் பிறர் கூறினாலும் அவன் அப்படிச் செய்திருக்கமாட்டான்; பிற தியபிள்ளைகள் சேர்க்கையால்தான் செய்திருக்க வேண்டும் என்று வாதித்துச் சாதிப்பாள். அத்தகைய பிள்ளையிடத்தி லும் தாய் அன்பு காட்டுவதில் குறைவே யிராது. ஆணுல், தன் பிள்ளை கட்குடியன் என்பதைத் தாய் அறிந்தால் பொ றுக்கமாட்டாள். அவனே அறவே வெறுத்துத் தள்ளுவாள். அங்கனமாயின் சான்றேர் கள்ளுண்டு களிக்கும் புல்லரை என்னவாறு எண்ணு வர் ? என்று கேட்கிருர் திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/58&oldid=991850" இலிருந்து மீள்விக்கப்பட்டது