பக்கம்:வள்ளலார் யார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் இறவா நிலை 数写 ‘என்ருள் முகத்தேயும் இன்னுதால் என்மற்றுச்

சான்ருேர் முகத்துக் களி,

இங்ஙனம் அறிவை மயக்கி, உணர்வைக் கலக்கி, இழிவைப் பெருக்கும் பனங்கள்களப் பருகிக் குடிவெறி யில் கூத்தாடும் சிறுமதியாளரும் பெரும்புலவரென வும் அருங்கவிஞரெனவும் போற்றப்படுகின்றனர்.

அருட்பெருங் கவிஞராகிய வள்ளலார் தில்லைக் கனகசபை நடுவிலிருந்து கள்ளுண்டேன் என்று களிப் புடன் குறிப்பிடுகிருர். பனைமரத்தின் அடியிலிருந்து பாலேப் பருகிலுைம் கள்ளைப் பருகியதாகவே உலகம் சொல்லும். ஆல்ை கனகசபை நடுவிலிருந்து உண்மை யாகவே கள்ளேப்பருகினலும் பாலேயோ, தேனேயோ பருகியதாகவே உலகம் பகரும். அதுபோல வள்ளலார் பெருமான் கனகசபை நடுவிலிருந்து கள்ளுண்டேன்' என்று கூறில்ை கூத்தப்பெருமானது குளிர்ந்த அருளா கிய கள்ளைப் பருகியதாகத்தான் அறிவுடையோர் கருதுவர். -

பருவம் எய்திய பாவை யொருத்தி தில்லைப் பொன்னம்பலத்துள்ளே புகுந்தாள். அங்கு ஆனந்தக் கூத்தாடும் பெருமானின் திருமேனி யழகைக் கண்ணு ரக் கண்டு கழிபேருவகை கொண்டாள். அவன்மீது கொண்ட அளவில்லாத காதல் என்னும் கள்ளையுண்டு மீண்டாள். காதற் கள்ளை யுண்ட களிமயக்கால் ஏதேதோ பேசிப் பிதற்றிள்ை. ஆடிப்பாடி அகமகிழ்க் தாள். சற்று நேரத்தில் மயக்குற்றுத் தரையில் விழுந்து கிடந்தாள். உடன் வந்த தோழி, அவள் உள்ளத்தில் புகுந்த வள்ளலேக் கள்ளனெனக் கட்டுரைத்தாள். அது கேட்ட தாய் அவள்மீது சினங்கொண்டு கண் சிவக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/59&oldid=644469" இலிருந்து மீள்விக்கப்பட்டது