பக்கம்:வள்ளலார் யார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வள்ளலார் யார்?


தாள். பக்கத்து வீட்டுப்பெண்கள் எல்லாம் சூழ்ந்து நின்று கொண்டு அவளைப் பரிகாசம் செய்தார்கள்.

இந்தக் காட்சியை நம் நினைவுக்குக் கொண்டுவரும் வள்ளலார், தம் ஆன்ம நாயகனுகிய ஆனந்தக் கூத்த னின் அருளமுதைப் பருகி இன்புற்று நிற்கும் தமது கிலேயையே புலப்படுத்துகின்ருர்.

'கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே கண்டதலால் உண்டதிலே என்றவத ளுலோ எள்ளுண்ட மற்றவர்போல் என்னேகினை யாதீர்

என்றுரைத்தேன். இதனுலோ எதேைலா அறியேன் உள்ளுண்ட மகிழ்ச்சியெலாம் உவட்டிநின்ருள் பாங்கி

உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ண ளாளுள் துள்ளுண்டு பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்ருர்

சுத்தர்கட ராசர்திருச் சித்தம்அறிந் திலனே ? : என்பது பத்தியாகிய கள்ளையுண்ட வள்ளலாரின் தெள்ளமுத வாக்காகும்.

இங்ங்னம் பத்தியாகிய கள்ளையுண்ட வள்ளலார் பித்தேறிப் பிதற்றுகின்ற மொழி கேட்டுப் பழித் துரைத்தார் பலர். குடிகாரனேப் போல் குளறுகின் ருனே என்று குறைத்துப் பேசினர் பலர். அந்த மொழி களே எல்லாம் கேட்ட அருள் வள்ளலார் பழித் துரைத்த பாமர மக்களுக்குப் பக்குவமாக இன்மொழி பகர்ந்தருளினர்.

ஐயோ! மக்களே! நான் கனகசபை நடுவிருந்து கள்ளேக் கண்டதும் உண்டு; அதனே கன்ருக உண் டதும் உண்டு; நான் உண்ட கள், பனேயிலும் தென்னேயிலுமிருந்து வடித்திறக்குவதன்று; அது எக்காலத்திலும் இறவாத நிலையாகிய மரணமிலாப் பெருவாழ்வைத் தரும் மாண்புடைய கள்ளன்ருே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/60&oldid=991851" இலிருந்து மீள்விக்கப்பட்டது