பக்கம்:வள்ளலார் யார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வள்ளலார் யார்?


அதனுலேயே ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே, தம்மைப் பெற்ற தங்தையார் கரங்களில் கிடந்த வண்ணம் ஞானகடத்தரசின் புண்ணியப் பொது5டச் சிறப்பைக் கண்டு உள்ளம் களிபூத்தார். இராமலிங்கரது இதயத்தே அப்போது பூத்த அருள் மலர் காயாகக் காய்த்தது. அவ் வருட்காய் முதிர்ந்து கனியுமோ? கனிவதற்கு முன்னுல் வெம்பி விழுந்து விடுமோ? பொது ருடம் செய்யும் புண்ணியன் இன்ன ருள்ால் வெம்பாது முதிர்ந்து பழுத்தாலும் என் கைக்கு எட்டுமோ? அத் திருவருள் திங்கனி, எனது கைக்குக் கிட்டும் முன்னுல் மலமாயைக் குரங்கு கவர்ந்து கொள்ளுமோ? மாயைக் குரங்கு கவராது மலர்க்கரத்தே கிடைத்தாலும் மனமகிழ யான் உண்ணுவேனே? உண்ணும் போதே தொண்டை விக்கிக்கொள்ளுமோ? விக்கல் வாராது அக்கனியை நன்கு சுவைத்து உண்ணு வதற்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவன் திருவுளம் இரங்குவானே? ஒன்றும் அறிகின்றேனில்லேயே? என்று திருவருள் ஞானத் தெய்வக் குழந்தையாய்த் தோன்றியருளிய வள்ளலார் பெருமானே உள்ளங் கரைந்து உருகிப்பாடும் தெள்ளமுதத் திருப்பாட்டை விருப்புடன் ஓதி இன்புறுங்கள்!

களக்கமறப் பொதுகடம்கான்

கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ?

வெம்பிஉதிர்ந் திடுமோ? வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/74&oldid=991858" இலிருந்து மீள்விக்கப்பட்டது