பக்கம்:வள்ளலார் யார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

வள்ளலார் யார்?


ாற முதற் பாடலே வாசித்தருளினர். பின்பு அதன் பொருளே விளக்கலாஞர். ஏழு மணிக்குத் தொடங் கிய விரிவுரை, இரவு பன்னிரண்டு மணியாகியும் பாட் டின் இரு வரிகட்கே விளக்கம் சொல்லி முடிந்தது. விரிவுரை கேட்ட மக்களெல்லாம் தேனுண்ட வண் டென அவரது சொல்லமுதத்தில் திளைத்து மூழ்கினர். கேட்டாரைப் பிணித்துக் கேளாரும் வேட்குமாறு விளக்கிய இராமலிங்கரது நாவன்மையைக் கண்டு

வியவாதார் எவருமிலர்.

இளைஞராகிய இராமலிங்களின் முதற் சொற் பொழிவைக் கேட்டு இன்புற்ற சோமு செட்டியார். இனி இவரே விரிவுரை நிகழ்த்த வேண்டும் என்று ரும்பிக் கேட்டுக் கொண்டார். 'சம்பந்தர் சீரைப் பற்றிய விரிவுரை பல நாட்களாகத் தொடர்ந்து நடை பெற்று வந்தது. தமையனர் சபாபதி பிள்ளையும் தம்பியின் விரிவுரையை ஒருபால் மறைந்திருந்து கேட்டு மகிழ்ந்தார்; வியந்தார். தணிகைக் குமரனே தம்பி யாக வந்தான் என்று கூத்தாடினர்.

ஞானசம்பந்தர் வரலாற்றைப் பேசி வந்த வள்ள பெருமான் ஒருநாள் அவர் நிகழ்த்திய அற்புதம் ஒன்றை அழகுற விளக்கிக்கொண்டிருந்தார். திரு மயிலேச் சிவநேசச் செட்டியாரின் செல்வத் திருமகள் பூம்பாவையின் எலும்புகளை இறைவன் புகழ்பாடிப் பெண்ணுருவாக்கிய செய்தி அவரது உண்ணெகிழு மாறு செய்தது. அதனே கினேந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்துருகிய வள்ளலார், ‘இறைவனே! உனது புகழைப் பண்ணமைந்த பாக்களால் ஞானசம்பந்தர்

ു.

§

பாடியருள, அதல்ை வெள்ளெலும்புகள் விரும்பத் தக்க பெண்ணுருப் பெற்று விளங்கின; ஆனல் அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/78&oldid=991860" இலிருந்து மீள்விக்கப்பட்டது