பக்கம்:வள்ளலார் யார்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தர் சீர் 75

தமையரைது பணியை ஒருநாள் ஆற்றும் வாய்ப்பை அடைந்தார்.

இராமலிங்க வள்ளலாரின் தமையனு ராகிய சபாபதி பிள்ளை புரானச் சொற்பொழிவு புரியும் புலமையாளர். வாரத்திற்கு ஒருநாள் சென்னையைச் சேர்ந்த முத்தியாலுபேட்டைச் சோமு செட்டியார் மனேயில் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணிவரை புராண விரிவுரை யாற்றுவார். ஒரு சமயம் செட்டி யார் தமது மனேயில் கூத்தப்பெருமான் திருவுருவம் ஒன்றைப் புதியதாக அமைத்து, அன்று சம்பக்தர் சீரைப் பற்றிச் சொற்பொழிவு செய்யுமாறு சபாபதி பிள்ளையை வேண்டியிருந்தார். அன்று சபாபதி பிள்ளைக்குத் திடீரென்று தலைவலியும் காய்ச்சலும்

3.

தாங்க முடியாமல் வந்து வருத்தின. அதல்ை அன் றைய சிறப்பு நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லையே என்று அவர் உள்ளம் வாடியது. அதனேக் கண்ட அவர் மனைவியார், இராமலிங்கரது அருளாற்றலைப் பற்றி அவருக்கு மெல்ல அறிவித்தார். அவ் வம்மை யாரது வற்புறுத்தலால் இசைந்த சபாபதி பிள்ளே, தம்பியை அழைத்து, "நீ செட்டியார் வீட்டிற்குச் சென்று செய்தியைக் கூறிச் சம்பந்தர் புராணத்தில் சில பாடல்களை வாசித்துவிட்டு வருக' என்று பணித் தார். அப் பணியைத் தலைமேல் தாங்கிய இராமலிங் கர், செட்டியார் வீட்டை யடைந்து செய்தியைக் கூறி, விரிவுரைப் பணியைத் தொடங்கினர்.

வேதமீெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பர்தமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/77&oldid=644510" இலிருந்து மீள்விக்கப்பட்டது