பக்கம்:வள்ளலார் யார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வள்ளலார் யார்?


பாடவல்ல வித்தகம் பெற்றது. இரு கடைவாய் ஒழுகப் பால் பருகிகின்ற பாலரைத் தந்தையார் கோல் கொண்டு ஒச்சிப் பாலூட்டியவர் யார்?' என்று அதட்டியபொழுதே அவர் தோடுடைய செவியன்' என்று தொடங்கிப் பாடியருளினர் அன்ருே!

இறைவி ஊட்டிய இன்னமுதப் பாலால் ஞான மழை பொழியத் தொடங்கினர் சம்பந்தர். தாம் பெற்ற திருவருள் திறத்தால் தமிழகத்தைச் சூழ்ந்த சமணிருள் போக்கிச் சைவப் பேரொளி வீசுமாறு செய் தருளினர். இத்தகைய சம்பந்தர் சீரினைச் சேக்கிழார் பெருமான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்களால் பெரிய புராணத்தில் பேசி யருளுவார். அறுபத்து மூன்று அடியார்களின் வரலாற்றை நாலாயிரம் பாக் களால் விளக்கியருளும் சேக்கிழார் பெருமான், ஞான சம்பந்தர் வரலாற்றை மட்டும் ஆயிரத்திற்கும் மேற். பட்ட பாக்களால் விளக்குவாராயின் சம்பந்தர் சீர் யாராலும் அளவிட்டுக் கூறும் தரத்ததன்று. இதன. லேயே பிள்ளே பாதி புராணம் பாதி’ என்னும் பழி மொழி வழங்கத் தொடங்கியது.

ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போதே தில்லேக் கூத்தன் திருவருள் பெற்ற நல்லருட் செல்வ ராய வள்ளலார் பெருமான் ஒதாது உணர்ந்த உத்தமர். கந்தப் பெருமானே யன்றி இந்த உலகில் அவருக்கு எந்தப் பெருமானும் கல்வியூட்டியதில்லை. முருகவேள் திருவருளால் ஒன்பதாண்டுப் பருவத்திலேயே அவரது உள்ளத்தில் கவிதை வெள்ளம் ஊற்றெடுத்தது. அவ் வருளாற்றலேத் தாய்போல் அவரைக் காத்துவந்த அவர்தம் அண்ணியாரே அறிந்தார். அதனல் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/76&oldid=991859" இலிருந்து மீள்விக்கப்பட்டது