பக்கம்:வள்ளலார் யார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கஅ. கான்மாறி ஆடிய கற்பகம்

சைவ கன்மக்கள் கோயில்' என்று சிறப்பாகக் குறிப்பிடும் தலம் சிதம்பரம். அதனைத் தில்லே யென் றும் சொல்லுவர். வானகி மண்ணுகி வளியாகி ஒளி யாகி ரோகி எல்லாமாய் விளங்கும் ஈசன் வானவெளி யாக ஒளிரும் உண்மையை உணர்த்துவது அத்தலம். அம்பரம் என்பது வெளி. சித்து என்பது ஞானம். சிதம்பரம் என்பது ஞான வெளியினைக் குறிக்கும். அத்தலத்தில் ஞான வெளியினில் வானவர்சன் மோன கடம் புரிகின்றன். அவன்தான் தில்லேயம்பலக் கூத்தன்.

தில்லேக் கூத்தனத் தரிசித்துத் திருவருள் பெற்ற அடியார்கள் பலர். ஞானசம்பந்தர் முதல் ஞானச் செல்வராகிய இராமலிங்கர்வரை எண்ணற்ற புண் னிையச் செல்வர்கள் அச் செல்வன் கழல் ஏத்தும் செல் வம் செல்வமே!’ என்று சிந்தை மகிழ்ந்து பாடியுள் ளனர். தென்தில்லே மன்றினுள் ஆடிய கூத்தன், இன்று எனக்கு ஆரமுதம் ஆனுன் அவன் தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்' என்று மனங் கனிந்து உருகினர் மாணிக்கவாசகர்.

தில்லைப் பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடிய பெருமான் தென்திசை நோக்கியே ஆடி வந்தான்; தமிழ் மதுரைத் திருநகரில் உள்ள வெள்ளியம்பலத்தே துள்ளியாடினன். நெல்லேத் தாமிர சபையிலும் தாண் டவம் ஆடினன். இறுதியில் குற்முல மலேச்சாரலுக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/80&oldid=991861" இலிருந்து மீள்விக்கப்பட்டது