பக்கம்:வள்ளலார் யார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

வள்ளலார் யார்?


'சான்ருேன் என்கை ஈன்ருேர்க்கு அழகு" என்பது அத் தமிழ் மூதாட்டியாரின் அமுதமொழி.

தாயொருத்தி கருவுற்றுத் தான் பெற்ற பிள்ளை ஆண்பிள்ளையாக இருந்தால், பெற்ற பொழுதே அதனைப் பெறுதற்கு உற்ற துன்பமெல்லாம் அகன்று பெருமகிழ்வுறுவாள். அங்கனம் கருவுயிர்க்கும் கடுந் துன்பத்தையும் காற்ருய்ப் பறந்து மறைந்துபோகு மாறு செய்யும் ஆண்பிள்ளே சாண்பிள்ளையாக இருந் தாலும் சான்ருேன் என்று கற்றவரும் மற்றவரும் இளித்தேத்தும் பெருமையுற்ருல் அவனேப் பெற்ற தாய்க்கு ஈன்ற பொழுது ஏற்பட்ட இன்பத்தினும் எல்லையற்ற இன்பம் ஏற்படும் என்று சொல்லுவார் வள்ளுவர்.

'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனச்

சான்ருேன் எனக்கேட்ட தாய்' என்பது அவர்தம் வாய்மொழி.

ஒருவனேச் சான்ருேளுக்கிப் பெருமக்கள் போற்று மாறு செய்யவேண்டிய பொறுப்பு, தந்தையைச் சார்ந்ததாகும். சான்முேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' என்று பொன்முடியார் பொன்னை மொழி யால் இக்கருத்தை வலியுறுத்துவார். சான்ருேர் நிறைந்த கல்லவைக்கண் முந்தி இருக்குமாறு செய்வது, தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி' என்றே வில்வார் பெருநாவலர். இங்கனம் கற்றவர் போற்றும் பெற்றி :புடைய ஆளாவது அறிவா அலும் ஒழுக்கத்தா லுமே. -

இறைவன் திருவருளேப் பெறுதற்குரிய ஆளா வதே அருமையுடைய செயலாகும். இம்மையில் ஆளாதல் மறுமையில் ஆளாதற்கு அடிகோலுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/96&oldid=991862" இலிருந்து மீள்விக்கப்பட்டது