உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பிகையிடம் குறைபடுகிறாரா? மிரட்டுகிறாரா? அம்பிகையை அவர் அந்தச் சமயம் அழைத்தபோது, எந்தவிதமான மனப்பான்மையுடன் இருப்பதாக எண்ணுகிறீர்கள்? எண்ணிப் பாருங்கள்—எண்ண, எண்ண வேடிக்கை வளரும். அவரையே கேட்டுப் பாருங்கள்—அவர் சாதுவாக இருந்தால்—அதைவிட வேடிக்கையாக இருக்கும்.

கடை முதலாளியின் பெயரைக் கந்தப்பன் என்று கொள்வோம்—அவர் துணைவியாருக்கு, சின்னம்மா என்று பெயரிடுவோம். இருவரும் சந்திக்கின்றனர். அவரைச் சந்திக்குமுன்பே, சந்திரசேகரர் ‘சேதி’ அம்மைக்குத் தெரிந்து விட்டிருக்கிறது. சமயமறிந்து கேட்கிறார்கள், “அவர் கடையிலே சரக்கு பூராவும் விற்றுவிட்டாராமே” என்று. “ஆமாம்” என்று சுருக்கமாக, சோகத்துடன் கூறுகிறார், கந்தப்பர். “கடவுள் அவருக்கு நல்ல வழி காட்டினார்”—என்று சின்னம்மா கூறுகிறார்கள், எப்போதும்போல. கந்தப்பரை நாம் பார்த்திருக்கிறோம் முதலிலேயே, கவனமிருக்கிறதல்லவா? நீறு பூசியவர்!! எனவே, சைவர்! பக்தர்! எனினும் சீறுகிறார், சின்னம்மாவின் பேச்சைக் கேட்டதும்; “கடவுளு காட்டினாரா, கடவுளு! பய, ஆள் விழுங்கி......வாடிக்கைக்காரன்களை வலை போட்டு, பிடித்து, அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு பேசி, கொள்ளை அடித்துக்கிட்டான். கடவுளு கொடுக்கிறாரா, கடவுளு! இவனுக்கா! மாதத்திலே மூன்று தடவைகூட நிஜம் பேசமாட்டானே, அவனுக்குப் போய், கடவுள் உதவிசெய்யறாரா? தரகு தர்மலிங்கம் இல்லே, நம்ம கடைக்குவருவானே முன்னே எல்லாம், நமக்கும் அவனுக்கும் கொஞ்சம் தகறாரு, அதனாலே அந்தப் பய, நம்ம கடை வாடிக்கையைச் சந்திரசேகரன் கடைக்குத்