10
திருப்பிவிடுகிறான்—அதனாலே ஒரு ‘சான்சு’ அடிச்சுது...கடவுளு, போய்க் கூட்டிகிட்டு வந்து சொன்னாரா, “போடா போய் சந்திரசேகரன் கடை சரக்கை வாங்கு — அவன் அநியாய விலை வைத்துத்தான் விற்பான், இருந்தாலும் அவனிடமே வாங்கடான்னு சொல்வாரா—அதுதானா கடவுளுக்கு வேலை.....”—என்று மடமடவெனப் பேசுகிறார். அந்தச் சமயத்திலே, அவர் யாராக இருக்கிறார்? பக்தராகவா? நாத்திகராகவா?—சிந்தித்துப்பாருங்கள்—வேடிக்கை வளரும். சின்னம்மாள், கணவரின் சீற்றம் அடங்கிய பிறகு, பேச்சைத் துவக்கி, ‘தரகு தர்மலிங்கத்தோடு ஏன் தகறாரு செய்துகிட்டீங்க? அவன் விஷமக்காரனாச்சே! நமக்கு ஏன் அவனோட விரோதம்? நஷ்டமும் கஷ்டமும் நமக்குத்தானே?” என்று கூறுகிறார். கந்தப்பர் இதற்கிடையிலே ஏழெட்டு முறை, முருகா! முருகா! என்று அழைத்துவிட்டார், ஆறேழுமுறை அம்பிகையை அழைத்துவிட்டார். கூடத்து மாடத்தில் உள்ள பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டார். கந்தப்பரின் ‘ஆத்திகம்’ அப்பு அழுக்கின்றி நடந்துகொண்டே இருக்கிறது. எனினும் தரகு தர்மலிங்கத்தைக் குறித்துப் பேச நேரிட்ட உடனே அவர்மனம் புதுவிதமாகிவிடுகிறது. “தகறாரு ஏன் வந்ததுன்னா கேட்கறே? தரகு, மற்ற கடைக்காரர் கொடுக்கிறதைவிட நான், அவனுக்குத் தாராளமாகத்தான் தருவது வழக்கம்—பிள்ளை குட்டிக்காரன் பிழைச்சிப்போகட்டும்னு. அப்படி இருந்தும், அவன் தைரியம், பேராசை, போனவெள்ளிக்கிழமை, ‘நூறு ரூபாய்’ கொடுன்னு கேட்டான். ஏம்பா என்று கேட்டேன். அவரு, கோயில் கட்டறாராம் அவர் தெருக்கோடியிலே—அதுக்கு, ‘தர்மம்’ கொடுக்கவேணுமாம், நானு. தர்மலிங்கம்! காலம் இருக்கிறதைக் கவனிக்காமே, இப்படி நூறுகொடு,