உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஐம்பதுகொடுன்னு கேட்டா, என்னப்பா செய்யறது. கோயிலுக்கும் குளத்துக்கும் கொட்டிக் கொடுக்கிறபடியாகவா இங்கே இலாபம் குவியுது—அப்படின்னு, சமாதானமாகத்தான் சொன்னேன். உடனே ‘கடவுள் காரியமாக நான் கேட்கிறேன், என் வீட்டுக் கலியாணம், சீமந்தத்துக்கு அல்ல—கொடுத்தா, அதுக்கான பலன், உங்களுக்குத்தான், கொடுக்காவிட்டாலும் சரி, உங்க இஷ்டம்—கடவுள் காரியத்துக்கு, பத்துபேரும் உபகாரம் செய்வாங்க—நீங்க, முடியாதுன்னு சொல்கிறிங்க —சரி — நான் என்ன சொல்ல இருக்குது—ஏதோ என்னாலே, உங்களுக்கு எவ்வளவோ கிடைச்சிருக்கும்; கடவுள் காரியத்துக்கு அந்தக் காசு உபயோகப்படக்கூடாது போலிருக்கு—உங்க இஷ்டம்—அப்படி இப்படின்னு, என்னமோ இவன்தான் கடவுளைக் கண்டுவிட்டவன்போலவும், நாமெல்லாம் கடவுள் பக்தியே இல்லாதவங்கபோலவும், என்னமோ கடவுள் இவனைக் கூப்பிட்டுக் கோயிலைக் கட்டச் சொன்னது போலவும், அளந்தான் அரை மணி நேரம்—அதுதான் தகறாருக்குக் காரணம்” — என்று விளக்குகிறார். சின்னம்மா, “என்னங்க, போனா போகுதுன்னு, ஒரு பத்தோ இருபதோ தொலைத்து விடுவதுதானே. அவனும் கடவுள் காரியமாகத்தானே கேட்டான்” என்றுகூற, சீறிய கந்தப்பர், “கடவுள் காரியமா! கடவுள் நேரிலேயா வந்தார், அவன்கிட்டே? ரூபாய்க்குக் கால்தரகு கேட்பாண்டி அவன். கடவுள்பேரைச் சொல்லிக்கிட்டு ‘காசு’ திரட்டக் கிளம்பிவிட்டான் அவன். எனக்கா தெரியாது இவன் நடத்தை. கோயில் இருக்கிற திக்குக்கூட இவனுக்குப் பிடிக்காது. காலையிலே தூங்கி எழுந்திருந்ததிலே இருந்து ராத்திரி படுக்கிறவரையிலே, பொய் பேசிப் பேசிப் பொழுதை ஓட்டுகிறான்—இவனுக்குக் கடவுள் பக்தி வந்து