உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

விட்டதோ! கடவுள் காரியம்னு சொன்னா, கண்ணை மூடிக்கொண்டு அள்ளிக் கொடுப்பாங்க என்கிற தைரியம்” என்று பேசுகிறார். சின்னம்மாவுக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடவுள் காரியத்துக்காக என்று முன்பு ஒருமுறை காட்டுப்பட்டி மிட்டாதாரர் வந்தபோது, கந்தப்பர், ஆயிரத்தோரு ரூபாய் கொடுத்திருக்கிறார். “நம்ம சக்திக்கு மீறின தொகை” என்று சின்னம்மா தடுத்துக்கூடக் கேட்கவில்லை, காட்டுப்பட்டியார் நேரே நம்மவீடுதேடி வந்துவிட்ட பிறகு, ஆயிரம் கொடுக்காவிட்டா நல்லதா என்று வாதாடினார். காட்டுப்பட்டியாரிடம் காணிக்கை கொடுப்பதுபோலப் பணத்தைக் கொடுத்துவிட்டு, “கடவுள் காரியத்துக்கு உபயோகப்படாதபடிக்கு வேறே எதுக்குத்தானுங்க பணம் இருக்குது” என்று பேசினார். இந்தக் காட்சிகள் சின்னம்மாவின் மனக்கண்முன் தோன்றின. தரகு தர்மலிங்கத்தின் ‘கடவுள் காரியம்’ கந்தப்பருக்குக் கடும்கோபம் கிளப்பிவிட்டது கேட்டு, சின்னம்மாளுக்குச் சிந்தனை குழம்பலாயிற்று. நமக்கு மட்டும் என்ன! சிந்தித்துப் பாருங்கள் — கந்தப்பர், யார்? அவருடைய மனப்போக்கு எத்தகையது? அவரை எந்த ‘வகையிலே’ சேர்க்கலாம், என்று எண்ணிப் பாருங்கள். வேடிக்கை வளரும். சின்னம்மா, சயனித்துக்கொண்டார்—சிவன்கோயில் தர்மகர்த்தா சீருடையாப்பிள்ளை, எதிர்வீட்டுக்காரர்—அவரிடம் பேசிக்கொண்டிருக்கச் சென்றார் கந்தப்பர். அரைமணி நேரம், ‘சத்விஷயம்’ பேசிக்கொண்டிருந்தனர். வீட்டுக்குப் பிறகு திரும்பினார் பாலைப் பருகினார்—சின்னம்மாளைப் பார்த்தார், “பால்காரன், ஏன் இப்படி, அக்ரமக்காரனாகிவிட்டான்—கடவுளுக்குப் பொதுவாக நடக்கச் சொல்லு” என்று கூறிவிட்டு, முருகனை மூன்று முறை அழைத்தார், அம்பிகையையும் அழைத்தார், படுத்தார், உறங்க. அந்த ‘அழைப்பு’ விடுத்த சமயம் அவருடைய