உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

மனநிலை என்ன? எதற்கு அழைத்தார்? என்பதுபற்றி எண்ணிப்பாருங்கள்—விந்தையாக இருக்கும்.

கடவுள் விட்டவழிப்படி நடக்கட்டும்—என்று சர்வ சாதாரணமாகப் பேசுவர், பெரும்பாலோர். அவர்களுக்குள்ள ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை இந்த வாசகம் காட்டுவதாகக், கருதப்படுகிறது.

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனும் செத்துவிட்டானோ?—முட்ட முட்டப்

பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கு.........

என்று கூறிடும் கவிதை வடிவிலே உள்ள கருத்தும் இது போன்றதே. ஆழ்ந்த ஆத்தீகத்தின், அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையின் அடையாளமாக இக்கருத்துக்களைக் கூறுகிறார்கள். இத்தகைய கருத்துள்ள ‘பேச்சு’ யாரால் எந்தவிதமான நிலைமைகளின்போது கூறப்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் தான், இந்த வாசகங்களின் முழு உண்மை துலங்கும். கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும் என்றபேச்சு எப்படி, சர்வசாதாரணமாக நாட்டிலே கேட்கப்படுகிறதோ, அதுபோலவே, கடவுள் காப்பாற்றுவாருன்னு, நம்பிக்கொண்டே இருந்தானப்பா அந்த ஏமாளி—கடைசிவரையிலே! என்ற பேச்சும் நாட்டிலே கேட்கப்படுகிறது. ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை முதல்வாசகம் காட்டுகிறது என்றால், அந்த நம்பிக்கையைக் கேலிசெய்து கண்டிப்பதாக இருக்கிறது இரண்டாவது வாசகம்.—இந்த இருவகைக் கருத்துக்களை வெளியிட்ட இருவரில், ஒருவர் ஆத்திகர், மற்றவர் நாத்திகர் என்றும் அறுதியிட்டுக் கூறிவிடமுடி-