14
யாது—அவர்களின் நினைப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கவனித்தால்.
★★★★
நெருப்புப்போலக் காய்கிறது—மூடிய கண்களைத் திறக்கவில்லை—சொட்டுப்பால்கூட உள்ளே இறங்கவில்லை—பார்க்கிறவர்களெல்லாம், ஐயோபாவம்! என்று கூறிப் பரிதாபப்படுகிறார்கள், கண்ணீரைத் துடைத்தபடி தாயார் குழந்தையின் பக்கம் உட்கார்ந்திருக்கிறார்கள், பாண்டுரங்கனிடம், நண்பர்கள் வருகிறார்கள், குழந்தையின் நிலைமையைப்பற்றி விசாரிக்க.
★★★★
“டாக்டர் தாமோதரத்திடம் காட்டினாயோ?”
“ஆறுநாள் அவர்தான் மருந்து கொடுத்தார்.........”
★★★★
“கட்டுமாத்திரை கந்தப்பண்டிதரிடம் காட்டினா, ஒரே வேளையிலே காய்ச்சல் போயிடுமேப்பா! பாண்டு! அவரைக் கூப்பிட்டுக் காட்டிப்பாரேன்”
“அவர் நாலுவேளை மருந்து கொடுத்தாருங்களே — பிறகு அவரே தான் சொன்னார், இங்கிலீஷ் மருந்து கொடுத்துப்பாரு பாண்டுன்னு”
இப்படி நண்பர்கள் கேட்கிறார்கள். பாண்டுரங்கன், தான் எடுத்துக்கொண்ட முயற்சியை எல்லாம் கூறுகிறான்; கடைசியாகத்தான் அவன் சொல்கிறான், மனக் கஷ்டத்துடன், கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்—என்று. பெரிய டாக்டர் ஒருவர் பெங்களூருக்கு வந்திருக்கிறாராம்