108
வேண்டாம். ஆண்டவன் சாட்சியாக, நான் அந்த ஏழையின் சொத்தை அபகரிக்கவில்லை” என்று ஏழையைக் கெடுத்தவன் அலறினான், ஏழையின் பக்கம் சிலர், சேர்ந்துகொண்டு அடித்து உதைத்து ஏழையிடமிருந்து அபகரித்த சொத்தை கொடுக்கும்படி வற்புறுத்தும்போது. இந்தக் குரல் கேட்டதும், ஆண்டவன் கண்களைத் துடைத்துக்கொண்டார். முகத்திலே, உறுதி பிறந்தது. ஊரார் நியாயம் கேட்கத் தொடங்கி விட்டார்கள்! ஏழையின் சார்பிலே பரிந்து பேசவும் ஆட்கள் உள்ளனர், இனி நமக்குத் தொல்லை இல்லை, என்று எண்ணினார். உறுதி காட்டும் முகத்துடன் நின்றார்.
ஏழையின் சொத்து திரும்பக் கிடைத்தபிறகு, அவன் களிப்புடன் காணப்பட்டான். எல்லாம் அவன் செயல்! என்று கூறி நின்றான். அவனுக்கு உதவியாக வந்தவர்கள் “அதுசரி அப்பா! அந்தக் கொடியவனிடமிருந்து, உன்னை மீட்டோமல்லவா? அப்பப்பா எவ்வளவு கடினமான காரியம்!” என்றனர். “அநீதி நிலைக்குமா? ஆண்டவன் அக்ரமக்காரனை விட்டுவைப்பானா?” என்றான் களிப்புடன் அந்த ஏழை. “சரி நேரமாகிறது, எங்கள் சிரமத்துக்குத் தர வேண்டியதைக் கொடுங்கள்” என்றனர் உதவிபுரிந்தோர். “நான் தருவதா? ஆண்டவன் உங்கட்கு நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் குறைவற்ற செல்வமும் தருவார்” என்று ஏழை கூறினான். உதவிபுரிந்தவர்களுக்குப் பொறுமை இல்லை. கொஞ்சம் கோபத்தோடு கேட்டனர், “இருக்கட்டுமப்பா! ஆண்டவன் கொடுக்கிறபோது கொடுக்கட்டும், இப்போது நீ தரவேண்டியதை எடு, கொடு” என்றனர். “கொடுப்பதுப்பற்றித் தடை இல்லை, ஆனால் ஆண்டவனின் அருஞ் செயலை நான் மறுத்ததாக முடியுமே என்பதுபற்றித்தான் கவலைப்படுகி-