109
றேன். அவனன்றி ஓரணுவும் அசையாதே என்றான் அந்த ஏழை. உதவி புரிந்தவர்கள் கோபம் தாங்க முடியாமல் ஒரு பலமான அறை கொடுத்தனர்; “அவனன்றி இந்த அறையும் கிடைக்காது” என்று கொக்கரித்தபடி. ஆண்டவன் தன் முகத்தைச் சுளித்துக்கொண்டார், வேகமாகத் தேவியாரின் அறைக்குச் சென்றுவிட்டார். அன்றுமட்டும் ஆண்டவன் ஆறு திருக்கோலம் கொண்ட அருமையை வியந்து என் குறிப்பேட்டில் ஆறுமுகம் என்ற தலைப்பிலே அன்றைய நிகழ்ச்சியை எழுதி முடித்தேன்.
★★★
“குறிப்பு எழுதினாயா, குறிப்பு! எவ்வளவு குறும்பு உனக்கு!”-என்று கூறிக் கோபித்திடும் அன்பர்கள், என் மனக்கண்முன் தெரிகிறார்கள். வீணாக அவர்களின் கோபத்தைக் கிளறி நான் காணப்போகும் பலன் என்ன! கோபித்திடும் அன்பர்கள், யோசிக்கவேண்டும், மனிதர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உடனுக்குடன் குறிப்பெடுக்க, ஒரு “சித்ரபுத்ரன்” இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறதல்லவா-பகுத்தறிவுக்குப் பொருத்தமானதா, அந்தப் புராணம்? எங்கள் ஊரிலே கோயிலே இருக்கிறது, சித்ரபுத்ரனுக்கு. யாருக்காவது ஆபத்தான நிலை என்றால், அந்தக் கோயிலுக்கு விளக்கேற்றித் தொழுவார்கள். என்ன பொருள்? என்ன நோக்கம்! “ஐயனே! சித்ரபுத்ரா! என் வீட்டிலே, நோய்வாய்ப்பட்டுத் துடிக்கும் இன்னவரை, அங்கே அழைத்துக்கொள்ளாதே, தயை செய்து காப்பாற்று-உனக்கு இதோ நெய் விளக்கு ஏற்றுகிறோம்”-என்று பிரார்த்திக்கிறார்கள். சித்ரபுத்ரன் வேலையோ, இன்னின்னவர்கள் இன்ன நாளில் பிறந்து இன்ன நாளிலே இறந்து தீர வேண்டும் என்ற “ரிகார்டுகளை” சர்வ ஜாக்ரதையாகக்