110
காப்பாற்றி, அவ்வப்போது கவனித்து, அந்த “பிரமலிபீயின்”படி அவரவர்களை அழைத்துவர, யமகிங்கிரர்களை அனுப்பிவைப்பது! விளக்கு ஏற்றிவைத்து வீழ்ந்து வணங்குபவர்களின் கோரிக்கையோ, “அப்பனே! காப்பாற்று! அழைத்துக்கொண்டு போய்விடாதே!” என்பது! அதாவது, உன்னிடமுள்ள ரிகார்டைக் கொஞ்சம் தள்ளிவிடு, என் மனுவை ஏற்றுக்கொள், என்பது பொருள். சுருக்கமாகச் சொல்வதானால், ‘தப்புக் கணக்கு’ போடும்படி சித்ரபுத்ரனைக் கேட்டுக்கொள்கிறார்கள் — கலெக்டர் ஆபீசிலே கிளார்க்கிடம் கனதனவரன்கள் சொல்வதில்லையா, “நம்ம பேப்பரை கட்டிலே, மேல் பக்கம் வைத்து விடு, தம்பி! நாகலிங்கம் பேப்பரைக் கட்டிலே அடிபாகத்திலே வைத்துவிடு”—என்று. அதுபோல! இப்படிக் குறிப்பெடுக்கும் கடவுளாக மட்டுமல்ல, எடுத்த குறிப்பைத் திருத்தவும், மாற்றவும், உரிமை பெற்று, அதற்காக ‘பூஜை’யைப் பரிசாகப் பெற்று விளங்கும் சித்ரபுத்ரனைப் பற்றிப் புராணம் பேசும்போது, ஏன் கோபம் வருவதில்லை! சிந்திப்பதில்லை அப்போது! புராணம் எழுதினவன், புத்தியிலே மட்டும் நமக்கு மேலானவன் என்று எண்ணிக் கொள்வதில்லையே, அவன், குலத்திலே மேலானவன், குணத்திலே மேலானவன், கடவுளிடம் நேரிடையாகப் பேசுபவன், என்றெல்லாம் நம்பிவிடுவதால், புராணீகன் புளுகுகளை மலை மலையாகக் குவித்தாலும், கன்னம் கன்னம் என்று போட்டுக்கொண்டு, “இருக்கும், இருக்கும்! நமக்கெப்படிப் புரியும்! இல்லாமலா சொல்வார்! சந்தேகிப்பது பாபம்!” என்று பயந்து பயந்து பேசிக் கொள்கிறீர்கள். அந்த அச்சம், அறிவுக் கண்ணை மறைத்து விடுகிறது. ஆனால், ஆண்டவனின் அன்றாட நடவடிக்கைகளை நான்