இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
111
குறிப்பெடுத்தேன்—ஒருநாள் நிகழ்ச்சி இது—என்று நான் ஒரு புனைந்துரை கூறினால், கோபம் வருகிறது! ஏனெனில், நம்மைப் போன்ற ஒருவன்தான் எழுதுகிறான் என்ற எண்ணம் பலமாக இருக்கிறது, நான் எழுதுவதைப் படிக்கும் போது. கண்டிக்கத் தைரியம் பிறக்கிறது! ஆராய ஆற்றல் சுரக்கிறது! இந்தப் போக்குடன், புராண இதிகாசக் கதைகளையும் அலசிப்பாருங்கள்—உண்மை துலங்கும். அந்தச் சிந்தனைத் தெளிவு பிறக்கவேண்டும் என்பதற்காகவே தீட்டப்பட்டது “ஆறுமுகம்”. ஆண்டவனிடம் ஒரு குறிப்பேட்டுக்காரன் இருப்பதை நீங்கள் நம்ப மறுத்தால், நிச்சயமாக, சித்ரபுத்ரன் குறிப்பெடுத்தபடி இருக்கிறான் என்ற புராணப் புளுகையும் நம்ப மறுத்தாக வேண்டும்.