உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

சூரர்கள் காசியிலே இருக்கிறார்கள். விக்ரமாதித்தன் காலத்து விசித்திரம் அல்ல—இப்போது, நம் கண்முன் உள்ள, இந்தத் தலைமுறை மக்களைத்தான் குறிப்பிடுகிறேன். இதோ, இது, ‘தினமணி’யில் வந்த செய்தி,


கதிரவனுக்குக் கல்லடி
காசிவாசிகள் கைவரிசை

காசி, ஜூன் 28.

மழை பெய்யாததால், வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் மனங்கொதிப்படைக்தார்கள். ஆதலால் சென்ற சில தினங்களாக அவர்கள் சூரியன் மீது கற்களை வீசிக்கொண்டிருந்தனர்.

இன்று அந்த மக்களின் மனம் மகிழ்ச்சியடையும்படி நீலவானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்தன. காலையில் அரைமணி நோமும் மாலையில் அரைமணி நேரமும் மழை பெய்தது. அதனால் இப்போது காசிநகரம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருக்கிறது.


காத்தாயி கோயிலை இடித்த செய்தி இதோ, சுதேச மித்திரனில்!

வைகைக் கரையில் விக்ரகங்கள்
மஞ்சப்பட்டினத்தில் சம்பவம்

ராமநாதபுரம், ஜூன் 18.

பரமக்குடி தாலுக்கா மஞ்சப்பட்டினத்தில் கிராமவாசிகள் சென்ற பிரமோதூத வருஷம் வைகாசி மாதம் சுமார் 2500 ரூபாய் செலவில் ஸ்ரீசடையப்ப ஸ்வாமி ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் செய்தனர். மேற்படி

3