உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கிராமவாசிகள் அவ்வருட முதல் க்ஷீணித்து வருவதாகக் கருதினர். எனவே ஆலயத்தின்மீது வெறுப்புற்று சென்ற ஞாயிறன்று அவர்கள் அந்தக் கோயிலைப் பின்னப்படுத்தி அதிலிருந்த மூலவர், 8 அடி உயரமுள்ள காத்தாயி அம்மன் விக்ரகம், இன்னும் பல விக்ரகங்களையும் அப்புறப்படுத்தி வைகை நதிக்கரையோரமாக வைத்துவிட்டனர். இப்போது அவ்வாலயத்தில் பூஜை கிடையாது.

இது விஷயமாக கிராமத்தில் விசாரித்தால், அவர்கள் அனைவரும் ஏகோபித்தே இக்காரியத்தைச் செய்தனரென்று கூறப்படுகிறது.


இப்போது என்ன சொல்கிறீர்கள்? இவ்வளவு “பிரகஸ்பதிகள்” இருக்கும் நாட்டிலே, காத்தாயி பேசினதாகவும், கதிரவன் கண்ணீர் விட்டதாகவும் நான் கூறுவதுதானா, அளப்பு! 1640—1740—1840—இந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவமல்ல, நினைவிருக்கட்டும்! 1940-க்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள்! அதாவது நாம் சுயராஜ்யத்துக்குத் தகுதியானவர்கள் என்று மாபெருந் தலைவர்கள், மன்றமேறிப் பேச ஆரம்பித்த பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சிகள்!!

இந்தப் பேதமை என்று ஒழியும்? எப்போதுதான் இவ்விதமான ஆபாசக் கருத்துக்கள் நமது மக்கள் மனதை விட்டு அகல்வது?

மௌனந்தான் பதிலா? வேறு பதில் கூறும் தீரர்கள் இல்லையா? இந்தக் கோசமான நிலைமையை மாற்றி, அறிவுதுலங்கச் செய்ய, மக்களை பகுத்தறிவாளர்களாகும்படிச்செய்ய, வீரர்கள் இல்லையா! நமக்கென்ன என்று இருந்து விடுவதும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்சு விடுவதும்