45
பேசவில்லை?” என்று கேட்டார். முருகன் வேலாயுதத்தை ஒரு புறம் வீசிவிட்டு, மயிலை விரட்டியபடி, “கிருத்திகையாம் இன்று! கிருத்திகையன்று மௌனவிரதம் இருக்கும் வழக்கமாம் ஓமந்தூரார். அதனால்தான் பேசவில்லை” என்றார். வள்ளியின் கோபம் கரை புரண்ட வெள்ளமாயிற்று—நான் இந்தச் சமயம் இங்கிருத்தல் ஆகாது என்று பறந்து சென்றேன், பக்கத்துச் சோலைக்கு.
குமரன் கொலுமண்டபத்துக் ‘குயில்’ எனக்குச் சொன்ன ‘சேதி’ இது! நம்பமாட்டீர்கள்! முருகனும் வள்ளியும் பேசுவதாவது, அதைக் குயில் கேட்டுவந்து கூறுவதாவது; இதெல்லாம் நம்பக்கூடிய விஷயங்களா, என்பதால் அல்ல! இவனிடமாவது குமரனிடம் பழகும் குயில் பேசுவதாவது!—என்றுதான் கூறுவீர்கள். முருகன் வள்ளி பேசக்கூடும் — குயில் அதைக் கேட்கவும் கூடும்! பிறரிடம் குயில் பேசுமா?—என்றுதான் எண்ணுவீர்கள்—மன்னிக்கவும்—எண்ணுவார்கள், எத்தர்களால் ஏமாளிகளாக்கப்பட்ட விசித்திர சித்தர்கள்.
குயில் கூறிற்றோ இல்லையோ கிடக்கட்டும், குமரனும் வள்ளியும் இருதார தடைச்சட்ட சம்பந்தமாக வேறு என்ன முறையிலே பேசியிருக்கமுடியும்—அதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
நாட்டிலே உருவாகிக்கொண்டுவரும் புதியநிலைகள் நமது கடவுள்களின் பழைய நடவடிக்கைகளைக் கண்டனத்துக்கு உரியனவாக்கி வருகின்றன — இதை உணர்ந்துகொண்டால் போதும்.