உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

ராக விட்டுவிட்டு, கொல்லும் பாம்புக்குப் பாலூட்டுகிறாயே! இதுவா நீதி! இதுவா நேர்மை! இதுவா, உன் அருள்? இதைச் செய்யவா உனக்கு மனம் இடம் தருகிறது! ஏன் இப்படி ஏழைகளை ஏக்கத்திலே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய், எத்தர்களை வாழச்செய்து அக்ரமம் செய்கிறாய்! பக்தர்களை ரட்சிக்கத்தானே கோயிலில் குடி இருக்கிறாய் கொட்டுமுழக்கு கேட்கிறாய்! கோலாகலத் திருவிழா கேட்கிறாய்! எதிலேயாவது இந்த ஏழை, என்போன்ற ஏழைகள், உன் மனம் கோணும்படி நடந்துகொண்டதுண்டா? பூஜை செய்யத் தவறினோமா? பக்தி செலுத்தத் தவறினோமா? வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிக்கூட, உனக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையைச் செலுத்திக்கொண்டுதானே வந்தோம்! சொல், சொல்லம்மா, மாரீ! சொல்! ஏன், எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை! காதகர்களிடம் கருணை காட்டினாயே, நியாயமா? அனாதரட்சகி என்ற பட்டமா உனக்கு! இதோ அனாதை வந்திருக்கிறேன்—அக்ரமக்காரர்களை வாழவைக்கும் உன்னைத்தான் காண வந்திருக்கிறேன்—உன் கலியாண குணங்களை நாக்கிலே வறட்சி உண்டாகும் அளவுக்குக் கத்திக்கத்திப் பூசித்து வந்தேனே, அந்த பக்தன், இதோ வந்திருக்கிறேன். அம்பாள் கண்திறந்தால் மலைபோல் வந்த துன்பம் பனிபோலப் போய்விடும் என்று மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்த மந்தமதி படைத்தவன் வந்திருக்கிறேன், அவள் அறிவாள் அனைத்தையும், பழிபாவம் இருக்கும் இடமறிந்து பஸ்மீகரம் செய்வாள், பஞ்சை பராரியைப் பரிவுடன் ரட்சிப்பாள், என்று மற்றவர்களிடம் பேசித் திரிந்து வந்த பக்தன் வந்திருக்கிறேன். இதற்கு முன்பு எத்தனையோ தடவைகள் கற்பூரமும் தேங்காயும், பழமும் படையலும் ஏந்திக்கொண்டு வந்தவன். பாரம்மா, மாரி! பார்,

4