உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நெருப்பைவிடக் கொடியதாயிற்றே, அதனின்றும் இந்த ஏழைகளைக் காப்பாற்ற, அந்தக் கொடையாளி முன் வந்திருக்கலாமே வெங்கடேஸ்வரர் இல்லாதிருந்தால்! மற்றச் சீமைகளிலே ஒரே தெய்வம். அதற்காகச் செலவும் மட்டு, இங்கோ நாங்கள் எவ்வளவு பேர், என்ற கணக்கு எங்களுக்கே தெரியாது. எங்களைத் திருப்திப்படுத்தி தயவுபெற, பணம் செலவிட்ட பிறகு சீமான்கள் அலுத்துப்போவதுகூடச் சகஜம். இந்தச் செலவு இல்லாவிட்டால். அவர்கள் பணத்தை, ஏழைகளுக்கு இதம்தேடச் செலவிடுவார்கள். என்னை அலங்கோலமாக்கியவன்மீது, நான் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மானநஷ்ட வழக்கு தொடுத்தது தவறு. அவன் என்னை இது போன்ற அக்ரமங்கள் ஆகுமா? நீ இதற்கு உடைந்தையாய் இருக்கலாமா? என்று கேட்டான். நான் பதில் கூறமுடியாது, திகைத்தேன். உடனே அவன் என் சிலையை நொறுக்கினான். அவன் செய்தது தவறல்ல, அவன் என்னை என்னென்ன கேள்விகள் கேட்டான் என்பது உலகுக்குத் தெரிந்துவிட்டால், ஊரூருக்கும் அதே கேள்வி கேட்பார்கள். ஆகவே, வழக்கு வேண்டாம், நான் மறைகிறேன்.

[மாரி மறைந்துவிடவே, மன்னார் மருண்டு, கோர்ட்டுக்குப் போகிறார். அங்கு நீதிபதி பேசுகிறார்]

நீதி: மிஸ்டர், மன்னார்! குற்றவாளியைப் பைத்தியக்காரன் என்று டாக்டர் கூறிவிட்டார். எனக்கு முதலிலேயே சந்தேகந்தான். பைத்தியக்காரக் கேள்விகளைக் கேட்டான். பதிலில்லாமற் போகவே சிலையை உடைத்தான். நான் இது ஒரு சமயம், நாத்திகத்தின் விளைவோ என்று சந்தேகித்தேன். பிறகு விளங்கிவிட்டது. இந்த நிலைமையில், உமது கட்சிக்-