65
மன்னார்: என்ன, என்ன? கோர்ட்டுக்கு.............
மாரி: வரமாட்டேன். அவன் செய்ததிலே தப்பே கிடையாது.
மன்னார்: என்னம்மா இது? ஒருமாதிரியா பேசறீங்க? உடம்புக்கு என்ன?
மாரி: அப்பா! அந்த 70 பிணங்களைக் கண்டோமே, அவர்களும் என்னையும், என் போன்ற தேவதைகளையும் கும்பிட்டவர்கள்தான். அவர்கள் குறைகளை நாங்கள் தீர்ப்போமென்று நம்பி நம்பித்தான் பக்தி செலுத்தினார்கள்; பூஜித்தார்கள்; கோயிலைச் சுற்றினார்கள்; அவர்களைக் காப்பாற்றினோமா; இல்லையே, அதோ அவர்களின் பிணம்! சில்காட்டான், இதைப்போலப் பிணமாகவில்லை. ஆனால், அந்த 70 பிணங்களிலே, எதை எழுப்பினாலும், அவன் என்னை அடித்தது போதாது என்று சொல்லும். அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சமா? அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சமா? என்ன சாதித்துவிட்டோம், அந்த அனாதைகளுக்கு. எங்களுக்குக் கோயிலும் கொட்டு முழக்கும் எதற்கு? செல்வம் படைத்தவர்கள், உழைப்பால் பணம் சேர்த்தவர்கள், ஏதோ தங்கள் முயற்சியினால் பணம் கிடைத்தது என்று எண்ணாமல் எங்கள் அருளால் கிடைத்தது என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை காரணமாக, கோயிலுக்கும் கும்பாபிஷேகத்திற்கும், குடைக்கும் தேருக்கும், பணத்தைச் செலவிட்டு, பஞ்சத்தையும் பட்டினியையும், பட்டினியால் பிணமாகும் சோகத்தையுங் கண்டாலும், கடவுளே என்று, கூறிச் சும்மா இருந்துவிடுகிறார்கள். எங்களுக்காக அவர்கள் செலவு செய்வதை ஏழ்மையைப் போக்கச் செலவிட்டால் எழுபது பேர் இப்படிச் செத்திருக்கமுடியுமா? தங்கக்குடையில்லாததால் வெங்கடேசன், வெய்யிலிலே வாடியாபோனான்? தரித்திரம்