உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

“இதிலே விசித்தரம்‌ இல்லையே, உண்மையிலேயே, மாரி இருப்பதானால்‌ அவன்‌ செய்த காரியத்துக்கு மான நஷ்ட வழக்காடத்தான்‌ செய்வாள்‌. கோர்ட்டுக்‌ காட்சி நான்‌ தீட்டியபடிதான் இருக்கும்‌. இடையிலே தங்கக்குடை தர்மத்‌தைப்பற்றி மாரி கேள்விப்பட்டு, தரித்திரத்தால்‌ செத்தவர்‌களையும்‌ கண்டால்‌, நான்‌ நாடகத்திலே தீட்டியபடி, வழக்கை வாபீஸ்‌ பெற்றாகவேண்டும்‌, சிலையை உடைத்த சில்ஹாட்‌ வாசியைப்‌ பித்தர்‌ விடுதியில்‌ சேர்த்தால்‌, அவன்‌ இந்த உலகை பைத்தியக்காரச்சாலை என்றுதான்‌ கூறுவான்‌!” என்று வீரன் விரிவுரை நிகழ்த்தலானான்‌.

“வேண்டாமப்பா, உன்‌ பிரசங்கம்‌, இதோ வாசகர்கள்‌ உண்டு, நீ உண்டு, அவர்கள்‌ கூறட்டும்‌, உன்‌ நாடகத்தைப்‌ பற்றி!” என்று கூறிவிட்டு, இதனை உங்களிடம்‌ அனுப்புகிறேன்‌. தோழர்களே! உங்கள்‌ கருத்து என்ன? அவன்‌ பித்தனா!!


5