7
அவர்களை நாயன்மார் வரிசையிலே வைக்கலாம்போல் தோன்றும்; சிலர் பேசும்போதே அவர்களை நாத்திகர்களோ என்று கேட்பவர்கள் ஐயுறுவர். விந்தை இதுகூட அல்ல. நாயன்மார் வரிசையிலே வைக்கலாம் என்று தோன்றக்கூடிய விதமாக ஒருசமயத்தில் பேசியவரின் மற்றோர் வேளைப் பேச்சு, அவரையே நாத்திகக் கூட்டத்திலே சேர்க்கவேண்டும்போல் காணப்படும்.
★★★★
கடை முதலாளி கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார்—அவர் எதிரே, பார்வதிசமேதரின் படம், மலர்மாலையுடன் காட்சியளிக்கிறது — நீறுதான் நெற்றியில் — சந்தனமும் உண்டு. கவலையுடன் இருப்பவரிடம், பக்குவமாக நடந்து கொண்டு பழக்கப்பட்ட ‘எடுபிடி’, குத்துவிளக்கைத் தூண்டிக்கொண்டே பேசுகிறான்.
எ:—சந்திரசேகர செட்டியார் சரக்கு பூராவும் விலையாகிவிட்டதாம்......
மு:—பூராவுமா?
எ:—ஆமாம் — யார் கிடைப்பாங்களோ, தலையிலே மூட்டை கட்டலாம்னுதான் செட்டியார் காத்துக்கொண்டிருந்தாரே! கிடைச்சான் ஒரு ஏமாளி—பூரா சரக்கையும் தள்ளிவிட்டார் அவனிடம்.
மு:—எவ்வளவு கிடைச்சுதாம்?
எ:—ஆறுக்குக் குறையாதாம்.
★★★★
கடை முதலாளி ஒரு நீண்ட பெருமூச்சுடன், “அம்பிகே!...” என்று ஒருமுறை கூறிவிட்டு, “ஆறு இருக்கும்னா