பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கழகத்தில் 'தொல்காப்பியத் தகைஞ'ராகப் பணி செய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பொன்விழாவில் இவர்க்கு டி.லிட். பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது. குன்றக்குடி ஆதீனம் ‘முதுபெரும் புலவர்’ என்னும் சிறப்புப் பட்டத்தையும் மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை 'செம்மல்' என்னும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின. அரசு இவர் மறைவிற்குப் பின் 'திருவள்ளுவர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க நிலையில் செயன் முறைகளை வகுக்க, அமைக்கப் பெற்ற வல்லுநர் குழுவின் தலைவராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். தமிழகப் புலவர் குழுவிற்கும் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக்குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல. காரைக்குடி தமிழ்ச் சங்கம் நிறுவிச் சங்கவிலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு அறநூல்கள் ஒப்பித்தல் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வகை யெல்லாம் தமிழ்த் தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளை வாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார். - - -

வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் 'கொடை விளக்கு' என்னும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு ‘மாமலர்கள்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும், தமிழ்க் காதலும் இரு கண்களெனப் போற்றத் தக்கவை. தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்க நெறி, காப்பியப் பார்வை, இலக்கியச்சாறு, தமிழ்க் கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள 'உரை நடையில் திருக்குறள்' என்னும் நூலை இயற்றியுள்ளார். மணிவாசகர் நூலகவெளியீடான 'கம்பர்' என்னும் இவரது நூல்