பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வள்ளுவம்

ஈகை போல்வது. தோட்ட வளர்ச்சிக்குப் பொது நீர்ப்பாய்ச்சலும் தனி நீர் ஊற்றலும் வேண்டுமாப்போல, உலக மக்கள் வளர்ச்சிக்குப் பொதுக் கொடையும் தனியிகையும் வேண்டும். அறியாமையாலோ, ஏற்கும் ஆற்றல் இன்மையாலோ, பயன்கொள்ளப் பிழைத்தார்க்கு, ஈகையே கை தூக்கும் உதவியாம். இவ்வண்ணத்தால் அன்றோ, பல்லாற்றானும் தாழ்த்தப்பட்ட நம் மக்களுக்குப் படிப்புதவி உணவுதவி என அரசினரும் பிறரும் தனிக்கொடை செய்ப, ஈகை யின்றேல், தாழ்வுண்டார்க்கு உய்தியில்லை; ஒப்புரவு இன்றேல், நாட்டிற்கு உயர்வில்லை என்று தெளிந்த உலகறிவுடைய வள்ளுவர், நாடும் குடியும் பொதுப்படவும் தனிப்படவும் வாழ. ஒப்புரவு ஈகைக் கடமைகளைத் தனி அதிகாரங்களாக வகுத்துக் காட்டினர் என்க.

ஈதலை, அளவு அறிந்து ஈக’ என்று வரையறுத்தாங்கு ஒப்புரவுக்கும் அளவு செய்வர்கொல் என்று காண்பான், குறள் தேடிப் புறப்பட்டேன். வரையறுக்கும் குறளைக் கண்டேன்.

உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை வளவரை வல்லைக் கெடும் (480)

நாடு நலம் பெருக்கும் ஒப்புரவுப் பெருங்கொடையே யாயினும், ஒருவன் பொருள் வலிக்கு மிகலாகாது என்பது இக்குறட் கருத்து. ஈகை பற்றிய குறள்களையும் ஒப்புரவு பற்றிய குறள்களையும் ஒருங்குவைத்து ஆராய்வார்க்கு ஆசான்தன் கருத்து நுண்மைகள் புலனாகும். ஒப்புரவு பெருஞ்செல்வர்க்கு உரியது. ஈகையோ, எல்லாரும் செய்ய வேண்டுவது. இக்குறிப்பானன்றோ, ஒப்புரவு இயையாக்கடை சாதல் இனிது என்னாது, ஈதல் இயையாக் கடை சாதல் இனிது என்றார். ஈகை உணவுக் கொடை மேலது. பசி நீக்கும் அவ்வளவிற்று, ஒப்புரவு வேறு பிற நலம் செய்வது என்று எண்ணியே, ஈகையதிகாரத்துப் பசிப்பிணி நீக்கம்பற்றிப் பல குறள் யாத்தனர்.

ஒப்புரவு நீடித்த நிலைத்த கொடைப்பாலது. பெரும் பொருள் வேண்டுவது; செய்த அன்றோடு ஒழியாது பின்னுங் காக்க வேண்டுவது. மருத்துவச்சாலை அமைக்கும் பெருமகன் இடம் வாங்கி இல்லங்கள் கட்டி முடிப்பதோடு தம் ஒப்புரவை நிறுத்திக் கொள்வானாயின், அது வெட்டி வைத்த வாய்க்கால் ஒக்கும்.