பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Q2 வள்ளுவம்

  • திருக்குறள் நண்பர்களே உருவப்படத்தை நெய்யூர்தி மேலும் யானைமீதும் வைத்துப் பூமாரி செய்து மின்விளக்குப் பந்தல் இட்டு நாடு வலம் வந்து, குறட் சுவடிகளை வானவூர்திவழித் துாற்றி னாலும், இப்பரப்பறைவால் செயல் மக்கள் மாட்டு அமையாது. கூத்துத்தாள் வாங்கும் குழந்தை யுணர்ச்சியே அவர்கட்குத் தோன்றும். மக்கட்கெல்லாம் கல்விவேண்டும்; கேள்வி வேண்டும்; முயற்சி வேண்டும் என்பது வள்ளுவம். இக்கோட்பாடு செயற்படுத்தற்கு உரிய அன்பராகிய நாம் பற்றல் வேண்டும். கல்வி வேண்டும் வள்ளுவர் பெயரால், தெருத்தோறும் பள்ளி அமைக. ஊர் தோறும் பெரும்பள்ளிகள் நிறுவுக. நூல் நிலையம் படிப்பகங்கள் பெருக்குக. கேள்வி வேண்டும் வள்ளுவர் பெயரால், கூடங்கள் கட்டுக. முயற்சிவேண்டும் வள்ளுவர் பெயரால், தொழிற்களங்கள், உழைப்புச்சாலைகள், உழவுப்பண்ணைகள் தொடங்குக. ஈகை வேண்டும் வள்ளுவர் பெயரால், ஏழை இல்லங்கள். குழந்தை விடுதிகள் பேணுக.

மடிமகனும் பசிமகனும் மடமகனும் இல்லை எனும் படி, பள்ளியில் தெருவும் தொழிலில் ஊரும் இல்லை எனும்படி, வள்ளுவர்க்குத் தொண்டு செய்க. ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் என்னும் பேதைக்குற்றத்துக்கு ஆளாகாதவாறு, இவ்வெல்லாம் முதற்கண் தத்தம் ஊரிலேயே ஆற்றுவார் ஆற்றுக. செல்வ மிகுதியிருப்பின், பிறவூர்களுக்கும் தொண்டினைப் பரப்புக கோடிச்செல்வம் குவியின். வள்ளுவர் பலவகைக் கல்லூரிகளும் வள்ளுவர் பல்கலைக் கழகமும் நிறுவ முயல்க. ‘திருக்குறட் பல்பதிப்பும் உலகப் பரப்பும் ஒரு பால் இன்றியமையாச் செய்கைகள்; எனினும் அவற்றை மேற்கோடல் எம்போலும் ஆசிரியர்களின் தொழிற் கடன், நும்மனைய செல்வர்கடன் மக்கட்கு வேண்டும் வள்ளுவங்களைப் பொருளால் நேரடியாகச் செய்வது” என்று என் மனத்துத் தெளிவை விரித்துரைத்தேன். “திருக்குறள் எண்ணங்களைத் தத்தம் ஊரின்கண்ணேயே முதற்கண் பொருளால் செயற்படுத்துவோம் என்று உடன்பட்டு வந்த அன்பர் பதின்மரும் வணக்கொடு மீண்டனர். புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் என்பது ஆணைவள்ளுவம், காணரீர்!