பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 4 - வள்ளுவம்

விடுத்துப் பல்லாற்றானும் வழுக்கி வீழ்ந்த கீழோரையே நிலையுயர்ப்பான் பெருமனம் வைத்தனர்.

புறங்கூறுவானை ‘அறன் நோக்கி ஆற்றுங்கொல் வையம் (189) என்றும், பயணில பாராட்டுவானை, மக்கட் பதடி (196) என்றும், கல்லா அழகனை. மண்மாண் புனைபாவை (407) என்றும். குற்றங் காவானை, அற்றம் மறைத்தலோ புல்லறிவு, (946) என்றும், பாவி ஏழையை உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்றும் வள்ளல் குணத்தானும் பொருளானும் இழிந்த நிலையினரை உயிர் புறம்போமாறு திருவள்ளுவர் ஏசுவர்; ஏசினும், அங்ஙன் ஏசும் உரிமையைத் தமக்கென வைத்துக்கொண்டவர். தந்தை தன் குறும்பு மக்களை ஒவாது வைது. குருதி பீறிடக் கோல்கொண்டு புடைப்பினும், அவ்விளஞ் செல்வங்களின் திருமேனி மேல் பிறர் மெல்லெனக் கைவைக்கவும் பொறானன்றே; இன்ன அன்பினர் நம் வள்ளுவர். பிறர் யாரும் ஏசப் புகுவரேல் “எவன்கொலோ வன் சொல் வழங்குவது, (99) நயமில செய்வார்க்கும் பண்பு ஆற்றாராதல் கடை (998) என வெகுண்டு உரைப்பவர்.

குற்றப்பட்டார் பின்னரும் குற்றப்படுவதும், மிடிப்பட்டார் பின்னும் மிடிப்படுவதும், மெலிவுற்றார் பின்பும் மெலிவுறுவதும், துன்பம் சுமந்தார் என்றும் துன்பம் சுமப்பதும் உலகப் போக்காகக் கண்ட வள்ளுவர் தம் தொண்டுக்கும் காப்புக்கும் உரியோர் இந்நிலையினரே என்று துணிந்தனர். குற்றப்பட்டார் திருந்திக் குணப்படலும், வறுமைப்பட்டார் முயன்று வாழ்வுப்படலும், மெலிவுற்றார் ஊக்கி வலிவுறலும், துன்புற்றார் சிரித்து இன்புறலும் இனி உலகக் காட்சியாக மாறவேண்டும் என்று திட்பங் கொண்டனர். தாழ்ந்தார் எஞ்ஞான்றும் தாழ்ந்து கீழ்ப்போவதற்கு உயர்ந்தார் கொடுமையும் புறக்கணிப்பும் ஒரு பெருங் காரணமாக அறிந்து கொண்டனர். கீழோர்மேல் உயர்ந்தார் அழுத்தும் சுமையைத் தடுத்தலும், செல்வத்து உயர்ந்தார் பெருக்கைக் குறைத்தலும், தாழ்ந்தாரை உயர்த்து நிறுத்தலும் தம் கடனாக எண்ணினர். இவ்விரக்க எண்ணங் காரணமாகப் பிறந்த குறள்கள் பலப்பல.

எளியார்மேல் றிே வெகுள்வானை, செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்’ (301), செல்லிடத்தும் அதனின் தீய பிற இல்