பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.08 வள்ளுவம்

அக்காலத்து உடைமைப் பூசல் தோன்றிற்றிலது. திருவள்ளுவர் அன்ன ஞாலப் பெரியோரின் உரைகளைச் சிறிதும் செயற் படுத்தாமையாலும், மேலும் அவ்வுரைகள் உலகிற்கு ஒட்டா என்று மடம் பட்டு இவறியமையானும், உடைமைப் போர் இன்று எழுவதாயிற்று என அறிக.

ஒப்புரவும் ஈகையும் தனியுடைமை நாடுகளுக்குக் காப்புத் தூண்கள் ஆவன. பெருஞ்செல்வர்.பால் ஒப்புரவும், மக்கள்பால் ஈகையும், அடையுண்ட மடைவாய்வழி நீர்க்கசிவுபோல் இன்று அருகி வருதலின், தனியுடைமை நாடுகள் கூடப் பொதுவுடைமை வழிகளைச் சிறுகச் சிறுகக் கையாள்வன. பேரூதியத்திற் பெரும் பகுதியை வரியாக விதிப்பன. தந்தை பொருள் மகன்கை மாறும் போது மாற்றுவரிக் கேட்பன. வரியை ஒரு பெரு வருவாயாக நம்பியிருத்தல் அரசாற்றலுக்கு ஈனம் என்ற கருத்தான், தாமே பல்தொழில்களை நாட்டுடைமைப் படுப்பன. உலகெங்கும் மறைமுகமாய்ப் பெருகிவரும் இப்பொதுவுடைமை அல்லது ‘நாட்டுடைமைப் புரட்சி கொடைவறிய செல்வத்தாய் பெற்றுவிட்ட குழவி என்பது வெளிப்படை.

இஃதோ என் கைச் சிறுதாள் ஒரன்பர் விடுத்த வினாச்சிட்டு. “வள்ளுவர் வகுத்த ஒப்புரவு ஈகைகளுக்குப் பொதுவுடைமை நாட்டில் இடமுண்டா?” என்பது அவர் வினா. காலத்திற்கு ஏற்ற வினா எழுப்பிய அவர்க்கு நம் நன்றி உரியது. பொருளென ஒன்று உள்ளவரையும், காற்று நீர் ஒளிபோல அன்றி அப்பொருள் ஒரு கணக்கு வழக்குப்படும் வரையும், ஒப்புரவு ஈகைப் பண்புகளுக்கு உயிர் உண்டு. நாம் இன்று பொதுவுடைமை என்பது ஒரளவுப் பட்டது: குறுக்கம் உடையது. ஒரு நாட்டுத் தனியுடைமையைத் தான் பொதுவுடைமை என்று கூறுகின்றோம். உண்மைப் பொதுவுடைமை யாவது உலகப் பொதுவுடைமை என்பது தெளிவு. நாடுகள் எனா அரசுகள் எனா ஞாலம் பிரிந்து கிடக்கும் வரை, ஊர் எனா நகர் எனா ஒரு நாடு பகுத்துக் கொள்ளும்வரை, இயற்கை உலகத்துக்கு இன்றியமையாச் செயற்கைப் பகுப்புக்கள் இருக்கும் வரை. பொய்யில் புலவர் வகுத்த ஒப்புரவு ஈகைப் பண்புகள் ஒருவந்தம் வேண்டற்பாலன. இப்பண்புகள் உளவேல், தனியுடைமை யரசும்