பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 வள்ளுவம்

இல்லம் வரும் இரவலனுக்கு அரிசியோ சோறோ இடுவதினும், பண்டவிலை நஞ்சேற்றம் கொண்ட இக்காலத்து. காசிதல் எளிமையும். சிக்கனமும் ஆம் எனக் கருதுகிறோம். ஆயின் பிச்சை பாலான் செய்கை யாது? சுடுபசியைப் பெரிதென மதிக்கிறான் அல்லன். வயிற்றுக்கு ஈந்த காசுகளைக் கொண்டு புகையூதுகிறான்; சுவைநீர் குடிக்கிறான்; படக்காட்சி பார்க்கிறான்; பசியடக்கி மெலிகிறான். பட்டினியைப் பொருட்படுத்துகின்றான் அல்லன். ஆதலால் காசீதல் அறமன்று: நூலோர் கருத்தும் அன்று. அணா காலரை கூடினும் இவறாது சோறோ இட்டிலியோ தோசையோ வடையோ பிறவோ உண்பண்டமாக ஈவதே உயிரீகை. கால் காலணாவாகப் பலர்க்குக் கொடுப்பதினும், சிலர்க்கேனும் பசி நிரப்புவதே அறிவிகை, ஈத்துவக்கும் இன்பமும் ஆகும்.

இனி ஒரு சாரார், ஈகை நாட்டின்கண் மடியர்களைப் பெருக்கும் எனக் கருதுவர். அக்கொள்கை உறைப்பால், கொடுக்கும் ஆற்றல் இருந்தும் ஈயாது இருப்பர். இக்காரணம் கொள்கையளவில் எம்மனோர்க்கு உடன் பாடு; எனினும் நடைமுறைக்கு ஒவ்வுவது அன்று. ஒருவன் தன் பசி தீர்த்துக் கொள்ளற்கு நேர்மை சிறந்த இயற்கை வழி முயற்சியாகும்; இவ்வழி தன்னையே நம்பியிருப்பது. செயற்கை வழி இரத்தலாகும்; இது பிறர் குணத்தை நோக்கி நிற்பது. முயற்சியானோ, இரத்தலானோ மக்கள் பசியின்றி வாழ வேண்டும். அங்ஙன் வாழச் செய்வது பசியாதார் கடன். நம்பால் வந்து இரப்பார்க்குப் பிச்சை ஈய மறுப்போமேல், மடி பெருக்கும் என்று ஏதுரைப்போமேல், முயல்விடம் காட்ட வேண்டும்; தொழில் வழங்க வேண்டும். தொழிலும் படுத்தாது, ஈகையும் செய்யாது, பசி தணியும் பயனும் நோக்காது, கொள்கைக்கண் கடைப்பிடியாக நிற்போமேல், அந்நிற்பு முடிவில் தன்னலமாகவே அமையும்; பொருட்பற்றாகவே அமையும்; இவறற் குற்றத்துக்கே துணைசெய்யும். தொழில் ஈதல், சோறிதல் இரண்டனுள், பின்னதே பலரும் செய்தற்கு எளியது. ஆதலின், நாட்டின்கண் மடிப்பெருக்கம் வருமோ என்று மயங்காது பசிப் பெருக்கம் குறைய நம் கடன் ஆற்றவேண்டும். அரசு தன் கடன் செய்யத் தவறுங்கால், குடிமக்கள் தம் கடன் என எண்ணவேண்டும். நேரடியாக நம்பால் வந்து இரந்த எளியோர்க்கு ஈரங்காட்டாது, வரி