பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 1 19

இனத்துக்குப் பாரமாவன். நடைப்பினம் ஆவான். இரத்தல் அரிய வறியதோர் காலத்துக் கொளத் தகும் காப்புவழி யாதலின், அஃது இயற்கைப் பொது நெறியன்று என நன்கு உணர்த்தும் நோக்கோடு, “இரவு அதிகாரம் செய்த ஆசிரியரே இரவச்சம் என ஒரதிகாரமும் செய்வார் ஆயினர். ‘கரவாது உவந்து ஈயும் கண் அனைய சிறந்தார்பாலும் இரவாமை கோடி உறும் (1061) என அறிவுறுத்தினர். ஆவிற்கு நீர் என்று இரப்பினும் (1066) என்ற கருத்தால், ஒருயிர்க்கு நன்மை செய்வதாயினும் கூட அதனை இரந்து செய்தல் இளிவரவு என உள்ளச் சிறுமை சுட்டினர். நல்லாறு எனினும் கொளல் தீது (222) எனப் பெருமிதம் வேண்டினர். இரவு, இரவச்சம் என்ற அதிகாரங்கள் தம்முள் முரணியன அல்ல. பலநிலை யறம் கரையும் உலகியல்பு சான்றது திருக்குறள் ஆதலின், வாழ்க்கை நிலை வேறுபாடு நோக்கிச் சொல்லிய வேறுவேறு அதிகாரங்களாகவே கொள்க.

உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (734) என்பது திருக்குறள் வரைந்த நனவுலகம். ஆதலின் வள்ளுவம் என்பது பசியின்மை, பிணியின்மை, பகையின்மை என்னும் முக்கூற்று உடையது. இவ்வின்மை மூன்றும் உடைய நாடே நம் தமிழ் முன்னோர் காண விழைந்த நல்லுலகம். திருக்குறள் அடிச்சுவடு போற்றி, இளங்கோவும் சாத்தனாரும், பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என நாடு வாழ்த்து முழங்குப. உலகத்து யாண்டும் உறுபசி கூடாது என்று குறிக்கோள் வரைந்த வள்ளுவர் காட்டும் நெறிக்கோள்யாது? முயற்சி, முயற்சி, முயற்சி. நாம் வாழும் உலகம் எவ்வகையானும் வறிய உலகமன்று; வற்றாப் பெருஞ்செல்வ இயற்கையை உள்ளும் புறமும் உடையது. இச்செல்வ உலகில் மக்கள் வறியர். நெற்றி வேர்வை நிலத்து வீழ இயற்கையைப் பயன்கொள்ளும் மெய்ம் முயற்சியில் வறியர். மக்களுயிர் அல்லாப் பிறவுயிர் எல்லாம் - அஃறிணைப் பிறப்பெல்லாம் - முயற்சி சான்றன: பசியோடு பிணியும், அற்று வாழ்வன: பசி தீர்க்கும் உண்ர்ச்சியோடு