பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை I 23

என்றால் பொருள் என்னை ஊழின் வலியே வலியாயின், தீயூழே எதனையும் முன்னின்று அழிக்குமாயின், திருந்துமின் திருந்து மின் என யாப்புறுக்கும் அறநூல்களால் பயனென்? ‘எந்நிலை ம்க்களும் முறையோடு முயன்றால், துணிவோடு ஊக்கினால் உயர்வாழ்வு பெற ஒல்லும் என்ற அதிரா அடிப்படையில் நின்றன்றோ, பெரியோரும் பெருநூல்களும், அறஞ்சாற்றி வருப. ஊழ் கெடுவலி உடையதேனும், மிதித்துக் கடக்க வல்ல பற்றுக்கோடு மக்கட்கு இன்றெனின், ஊழாட்சியே தலைசான்ற உலகாட்சியாய் விடுமெனின், அரசாட்சியாலும் பயனென்? யார் யாருக்குச் செய்யும் யாதானுந்தான் பயனென் இவ்வாறெல்லாம் இரக்கம் உடைய ஆசான் நெஞ்சும் எண்ணிற்றுப் போலும்.

உலகக் கட்டடம் கெட்டடிப்படைமேல் எழுந்ததன்று. முயற்சியே வாழ்வு; வினையே உயிர் என்பது வள்ளுவம். ஒருவன் ஊழ் அல்லது உலகச் சூழ்நிலை துணையாக நிற்பின், சிறிய முயற்சியால் பெரும் பயன் வரும். முயல்வின் பயன் அளவுக்கு மிகுந்து தோன்றும். இன்று சிலர் புதிய பெருஞ் செல்வராய் இருப்பதற்கு அவர்தம் பெருமுயற்சி காரணம் அன்று போருலகச் சூழ்நிலை காரணம் என்று நாம் அறிவோம். “ஆகூழாயின், முயற்சிப் பயன் இயல்பளவினும் இறந்து தோன்றும்; அத்துண்ையே யொழிய, முயன்ற அளவுக்கு வரவேண்டிய உரிமைப் பயனை அழிக்கும் கொடுங்கோன்மை ஊழுக்கு இல்லை மன்” என்பது வள்ளுவம், ஆதலின், -

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619) என வாழ்க்கைக்கு ஓர் அதிராப்பற்றுக்கோடு காட்டினார். “தெய்வம் நோக்கி இராது முயல்க என்பது கருத்து” என்னும் பரிமேலழகர் நுட்பக் குறிப்பு குறளனைய பெருமைத்து என்று கொள்க.

உடம்பு முயற்சிக்கே உரிய கருவி. ஆள்வினை நம் பிறப்புரிமை, எழுது கருவியை ஒருவனிடத்துக் கொடுத்து, “நீ எழுதக் கூடாது; எழுதின், எழுத்துப் பயன் அழிப்பல்; அதனை வாளா வைத்திரு’ என்று கூறுவார் உளரோ உளரேல், ஐயா! கருவி வினைப்படுதற்கா? துருப்படுதற்கா? என்று மறித்து வினவாரோ? ஓர்மின் முயற்சிக்கே