பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வள்ளுவம்

இற்றைப் பள்ளிப்பாட நூல்கள் போலப் பழைய கடைக்குத் தாள் நிறுவை அளவில் விலைபோகக் காண்கின்றோம். அவற்றின் மதிப்பு தாள் மதிப்பாகும்.

திருக்குறள் ஒரு நன்மகனார் தம் வாழ்நாள் முழுதும் ஆய்ந்து கண்ட எண்ணத்தொகுதி, பலர் வாழ்க்கையொடு உராய்ந்து ர்ேதுக்கித் துணிந்து நிறுத்திய உண்மைத் தொகுதி, மக்கள் என ஓரினம் உளநாள்வரையும் கற்று ஒழுகத்தகும் அறிவுத் தொகுதி. எண்ணம் ஊற்றெடுக்கும் சில நூல்களையேனும் கற்பதால் நம் வாழ்வுக்கு நிலையும், நினைவிற்குத் திட்பமும் பிறக்கும். அன்ன நூல்களுள் தலையாயது திருக்குறள் என அறிக.

அறிவுப் பொதுவுண்மை சுட்டிய ஆசான் காட்டும் மற்றொரு உண்மை யாது? ஆராய்வோம். முழுதும் கெட்டவன் என ஒருவன் உளனா? குறைவற்ற நல்லவன் என ஒருவன் உளனா? எனக்குத் தீயோன் மற்றொருவனுக்கு நல்லவன் ஆகக் காண்கின்றோம். அத்தீமகன் நாளை எனக்கே பெருநண்பன் ஆதலுங் கூடும். இல்லையென யார் துணிவர்கொல் ஓரினத்தாரால் புகழப்படுபவன் அயலினத்தாரால் பழிக்கப் படுகிறான். களவாளி தன் குடும்பத் தார்க்கும். படையாளி தன் நாட்டார்க்கும், காந்திக் கொலையாளி தன் கட்சியார்க்கும் மறஞ்சான்ற அன்புத் திருவுருவங்களாகக் காட்சி நல்குப. “மறத்திற்கும் அஃதே (அன்பே) துணை (76) என்பது குறள்.

பிறவிக்குணம் எனக் கொடை மடம்பட்ட பண்டைத் தமிழ் வள்ளல்கள்கூட, கானாது ஈத்தார் எனா, பரிசில் நீட்டித்தார் எனா, சிறிது கொடுத்தார் எனா, கொடுக்க மறுத்தார் எனாப் பழிப்பு உண்பதைப் படிக்கின்றோம். கணவன் கூற்றுவனாக, மனைவி காளியாக, மக்கள் சனியன்களாக், பெற்றோர் முட்டுக்கட்டைகளாக, பெரியோர் வஞ்சகர்களாக ஒருகால் வெறுத்துத் தூற்றப்படல் உலகப் புதுமையன்று. மிகக் கொடியன் ஆயினான் மிக மாறலும், சாலப் பெரியவன் அறக்கொடியனாய்த் திரிதலும் இவ்வுலகத்து நடவாச் செயல்கள் அல்ல. குன்றின் அனையாரும் குன்றுவர் (905) என்றும், சான்றவர் சான்றாண்மை குன்றின்

‘90) என்றும் குறள் உயர்ந்தோர் நிலைத்திரிபைச் சுட்டும்.