பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு - 141

அங்ஙன் முற்ற ஒதுக்குவதும் ஒதுக்கிப் பழிப்பதும் செய்தார் எனக் கருத்துக் கொள்ளின், அவர் ஆற்றலுக்கு இழுக்கல்லது பெருமை யுண்டோ?

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்

ப்ண்பறிந்து ஆற்றாக் கடை (469) என்பது ஆசான் கண்ட உலகியல். யாரையும் திருத்தும் நோக்கமே வள்ளுவம் ஆதலின், அவரவர் அறிவிற்கு ஏற்ப நெஞ்சு சுடுமாறு நடை யாத்தனர் என்றே துணியத்தகும். குறள் கற்பவர் தத்தம் நிலையொடு பொருந்திக் கற்பார் என்ற எண்ணத்தால், மிகத் தாழ்ந்த மக்கட்கும் சூடுண்டாக்கினார். எனவே அறிவுப் பிறப்பின ராகிய நாம் வாழ்வுத் திருத்தம் வேண்டின், அவரவர் நிலையறிவோடு திருக்குறளைக் கலந்து கற்கவேண்டும் என்பதை நினைவூட்டவே பிறப்பறிவு மட்டும் சாலாது; அவரவர் நிலையுயர்த்தும் சிறப்பறிவும் வேண்டும் என்பதை வலியுறுத்தவே நடிைப்பொருள் குறித்து ஈண்டு மொழிந்தேன். திருத்தமே வள்ளுவர் நெஞ்சு ஆதலின், நாம் ஒருவரை ஒருவர் அற ஒதுக்கவும், வறிதே பழிக்கவும் குறள் எடுத்தாளுவது அழகன்று என்று விடுக்க.

எல்லாரும் அறிவுத்தன்மை உடையர்; அதனை ஆட்சிப் படுத்தினால் எல்லாரும் வாழ்வு நலம் பெறுவர் என்று அதிரா மெய்ந் நம்பிக்கை தெரிவிக்கும் திருக்குறளிடைப் பிறிதொரு நல்லடிப் படையையும் காண்கின்றோம். இன்று எழுத்தாளர் பலர் விற்பனையிற் கண் வைத்து, அச்சுப் பொறியை முன்வைத்து, அவ்யானைக்கு இடையறாது கவளம் ஊட்டும் அவாவொடு, வந்தவையெல்லாம் கருத்தாக எழுதித் தள்ளிப் பக்கம் பெருக்குப. எண்ணத்திற்கும் எழுத்திற்கும் செலவழிக்கும் பொழுதையினும், பல்காலம் கவர்ச்சிக்கும் பரப்புக்கும் செலவிடுப. தம் எழுத்தால் மக்களும் மொழியும் உறும் நலத்தை நோக்காது. அவ்வெழுத்து தமக்குக் கொண்டு வரும் செல்வத்தையும் விளக்க மதிப்பையுமே நினைப்ப. தம் கையெழுத்து நூலை ஒரு முறைகூடப் பார்க்கும் அமைதியும் பொறுப்பும் இலராய், என் செய்வர், தம்நூல் பற்றிப் பிறர் வரைந்த மதிப்புத் தாள்களைத் தொகுத்து வைத்துக் கொண்டு பல்காலும் பார்த்து மகிழ்ப. எண்ணம் சுருங்கிய எழுத்து நூல்கள்,