பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி - 149

நெஞ்சறி நண்பர்களே! நாட்டு நடப்புக்களை - காலத்தின் ஒட்டங்களை - என் அறிவிற் பட்டாங்கு தெளித்துக் கூறுதொறும், நம்முள் பற்பலர் மனம் புண்ணுறுதலும் செய்யும் என்று ஓராற்றான் அஞ்சுவல். நடக்கை மேல் வைத்து ‘உராய்ந்து செல்லாது, குறள் குறளாக ஒப்பித்துச் சேறல் வள்ளுவக்கொலையாகும் என்று பிறிதோராற்றான் அஞ்சி நடுங்குவல். யாரொருவர் மனத்தையும் புண்ணாக்கல் எனைத்தும் என் நோக்கம் அன்று. அதன் மேலும் ‘மனத்தானாம் மானா செய்யாமை தலை (317) என்ற குறள் ஆணைப்படி, பிறர் வருந்தாவாறு உரைசெய்யல் வேண்டும் என்ற நோக்கம் உடையேன். ஆள் சுட்டிப் பேசுவதுதான் ஆகாதே யொழிய, நிலைசுட்டிப் பேசுவது வேண்டும். லிபிறரைப் பழிப்பான் தாக்குவதுதான் கூடாதே யொழிய, நாடும் யாரும் திருந்துவான் நடப்பினை ஆராய்தல் அஞ்சாது வேண்டும். காலத்து நிகழும் தன்மைகளின் அலசலை, ஒருவன் தன்னைத் தாக்குதலாக நினைவானேல், அந் நினைவு செருக்கொடு பட்ட மயக்கம் என விடுக்க. யார் கண்ணும் கோட்டம் எண்ணாது மெய்யுணர்வான் நிகழ்ச்சிகளொடு முரணுற்று இகலிக் காண்பதே என் உரை யொழுங்காதலின், யான் சீர்தூக்கிக் கண்ட உண்மையை அஞ்சிக் கரவாது அழுந்த மொழிவதே என் சொன்னடையாதலின், மனத் தூய்மைக்கும் அறிவிற்கும் முயற்சிக்கும் இடையூறாய் வளரும் பழக்க வழக்க எண்ணக் களைகளை அகற்றுமின் அகற்றுமின் எனக் குறட் செயற்படுவதே என் நெஞ்சமாதலின், என் சொற்களைப் பிறழ உணரற்க என ஒருதலையாக வேண்டிக் கொள்வல்.

சில்லாண்டுகளாக என் உள்ளத்தைக் கவல்விக்கும் கல்வி பற்றிய ஒரு சில சிக்கல்களை இன்று வெளியிடுவன். நம் இந்தியப் பெருநாடு ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையறுத்து உரிமைப் பணிபூண்டு ஐந்தாண்டுகள் ஆகின்றன. ஆங்கிலேயர் இந்நாட்டு இயல்பு அறிகிலர்: மக்கள் உள்ளம் தெரிந்திலர் தெரியும் நோக்கமும் இலர். இந்தியர் அறிவு பெற்றால் ஆள நினைப்பர் என்றஞ்சிக் கல்வி நல்கிற்றிலர். முடிந்தவரை சுரண்டிச் செல்வதே அன்னோர் உட்கோள். கால் கொள்ளா வேற்றாட்சியால் நம் பண்டைப் பண்பும் மொழிகளும் கலைகளும், மக்கள்போல் நலிவுற்றன. தன்னாட்சி