பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வள்ளுவம்

தகாதன யா? எவ்வது உறைவது உலகம் (425) என்றபடி, உலகம் போகும் போக்கு யாது அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை (469) என்றால், அவரவர் பண்பு எது? கற்க கசடறக் கற்பவை: (391): கற்பவை யாவை கடன் என்ப நல்லவை எல்லாம் (981); நல்லவை யா? அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் (474); அமைவும் அளவும் எவை? ஒல்லும் வகையான் அறவினை (33): ஒல்லும் வகை யாது? எனவரூஉம் எண்ணிலா வினாக்களுக்கு உரிய விடைகண்டு செய்வது நம் அறிவின் பொறுப்பு, சோறு உண்ண வழங்கலாம்; ஊட்டவும் செய்யலாம். பிறர் உதவி இவ்வெல்லைப் பட்டது. மென்று உட்கொளல் வயிறுடையான் வினை. எனைப் @ur நூலும் கருத்து வழங்கும்; உளங்கொளச் சொல்லும். நூலுதவி அவ்வளவிற்று. அக்கருத்துக்களை நிலைக்கேற்பக் கணித்துணர்ந்து செய்தல் அறிவுடையான் வினை. முடிவில் அவனவன் வாழ்க்கை அவனவன் அறிவாட்சிக் கண்ணது என்பது வள்ளுவம். இவ்வுண்மையை ஒருதலையான் முற்றுனர்ந்த வள்ளுவர், அறிவுடையார் எல்லாம் உடையார் (430) எனப் பொய்யாக் கருவி மொழிந்தார்.

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (463)

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் (915)

எனவரும் பல குறள்களால், அறிவை நம்பியே ஆசான் வாழ்வியல் வகுத்தார் என்பது பெறப்படும். பிறப்புக் கருவியை முன்னதாப் பயன்படுத்தும் நினைவும் துணிவும் மக்கட்கு இல்லை. முன்னோ பின்னோ வீழ நிற்கும் அடியற்ற வீட்டுச் சுவரை உடனே வீழ்த்தும் அறிவுத் துணிவுடையார் எத்துணைப்பேர் சுவர் தானே வீழ்ந்து சிலரைக் கொன்றபின், அன்றே இங்ஙன் நிகழும் என எண்ணி னேன் என்று துயர்ப்படுவாரே பலர். பெருத்த செல்வக் கணக்கு வழக்குகளைக் கூடுதல் குறைவு பாராது, பொய்ம்மானப்படாது, சிக்கலறுத்துக் கொள்ளும் முன்னறிவினர் எத்துணையர்? பொருள்