பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வள்ளுவம்

தன் குடும்பமாக அணைப்பதுவே துறவாகும். பிறப்பு என்னும் அறிவு வித்திலிருந்து இல்லறம் என்னும் அன்புமரம் தோன்றித்துறவு என்னும் அருட்பழம் கனிய வேண்டும். அருள் என்னும் அன்பீன் குழவி (757) என்பது குறள். இல்லறம் இருபாற்கும் உரியதுபோல், துறவறமும் ஒக்க அவ்விரு பாலார்க்கும் உண்டு. ஒருவரை ஒருவர் கைவிடார். ஆள் துறவாது அவாத் துறப்பர். முன்னெல்லாம் ஓர் இன்பண்டத்தைத் தான் நுகராது வைத்திருந்து கணவன் தன் மனைவிக்குக் கொடுப்பான்; அதுபோல் மனைவியும் கொழு நனுக்குக் கொடுப்பாள் பெற்றோர் தம் மக்கட்குக் கொடுப்பர். பிறர்க்கு வழங்கும் இவ்வன்பு நிலை இல்வாழ்க்கைக்கண் ‘குடும்பவுறுப்பினர் அளவில் காணப்படும். இந்நிலை முதிர்ந்த துறவுக்கண், உலகத்தையே தம் குடும்ப வுறுப்பினராக மதிக்கும் அருள்நிலை பிறக்கும். இரு நிலைக் கண்ணும் குடும்பம் என்பது உண்டு; தலைவன் தலைவியர் உளர். உடம்பு இளமை முதுமை எனப் பருவமாற்றம் உறுதல்போலக் குடும்பம் இல்லறம் துறவறம் என அறமாற்றம் பெறும் என்பது சுருங்கிய விளக்கம். மக்கட் பெருமகன் வள்ளுவர் கண்ட துறவுநெறிக்கு. உலகச் சான்றோன் காந்தியடிகளின் தூய வாழ்க்கைதான் பொய்யா இலக்கியமாவது என்று நாம் தெரிந்து கடைப்பிடிப்போமாக. மணவாத்துறவு உலகியல்பு அன்று, மணந்த துறவு செய்ந்நன்றி அறிவன்று என்று கொண்ட ஆசிரியர், உலகு ஒட்டும் அறங் கரைவதே வள்ளுவம் ஆதலின், இல்லறம் விடாத் துறவறம் கூறினார்.

மனம் அறி நண்பர்களே முத்திறத் துறவுகளுள் மக்கள் யாரும் ஒருவந்தம் கொள்ள வேண்டுவது, பற்றுத் துறவு என்பதில் ஐயமில்லை. மணந்துவிடும் தன்னலத் துறவு ஒருவரும் கொள்ளத் தகாதது என்பதிலும் ஐயமில்லை. மணஞ் செய்துகொளாப் பிறவித் துறவு பற்றி ஒன்று சொல்ல விழைவல். இத்துறவு இயற்கை முரண்: கொளற்கு அரியது என்றாலும் ஒரு சிலரேனும் கொள்ளற்கு உரியது. குடும்பப் பொறை சுமக்க அஞ்சியோ, தான்தோன்றித் தனமாய்க் கண்டவாறு திரிய விழைந்தோ. சில பல வேக வெறுப்புக்கு உட்பட்டோ. இளமைத் துறவு கோடல் கூடா வொழுக்கமாய் இழிக்கப்படும். துறவு நெறிக்கே அவஞ் செய்வதாகும். துறவு இனிக்