பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 175

வாழ்க்கை என்பது அகத்தினை ஆண் பெண் என்னும் ஈருயிர்க்கூட்டு. குடும்பத்துள் இன்றியமையாதவர் ஆனா பெண்ணா? என்பது பயனற்ற வினா. ஒரு நாளுள் சிறந்தது பகலா? இரவா? என்பதை ஒக்கும். கிழவன் கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும், காதலன் காதலி என்றும், ஏற்றத் தாழ்விலாப் பெயர்களையே ஆளுவர் தமிழ் நூலோர். இருவருள் யார் மாயினும், எஞ்சியோர் நிலை வாழ்க்கையாகாது. ‘காதலி இழந்த தபுதார நிலையும், காதலன் இழந்த தாபத நிலையும் எனத் தமிழ் முதல்வன் தொல்காப்பியன் கூறியாங்கு. இழவுநிலையாகிப் புறத்தினைப் பாற்படும். இது தமிழ்த் துணிபாதலின், குடும்பம் ஆண் நன்மைக்கு உரியது என்றும், குடித்துக் கழிக்கும் குவளைபோல நுகர்ச்சிக்குப் பின் பெண் துறக்கத் தக்கவள் என்றும், கானா அவ்வுலக வீடு கருதிக் கண்ட இவ்வுலக வீடு துறக்கத் தகுவது என்றும், சாற்றும் கொள்கைகள் எல்லாம் வள்ளுவ முரண்கள் எனத் துணிக.

மணவா நிலையும் துறவன்று: மணந்து விடுகையும் துறவன்று. பற்று நீக்கமே வள்ளுவத் துறவாகும். இயல்பாகும் நோன்பிற்கு ஒன்றின்மை (344) என உடைமைப் பற்றும், அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை (343) என உடற்பற்றும், பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை (345) என உயிர்ப்பற்றும் எனவாங்கு, யான் எனது என்னும் தற்பற்று அறுவதே உண்மைத் துறவு. ஒர் உயர்திணை மற்றோர் உயர்திணைக்கு உடைமையாதல் இல்லை. பெண்டிரும் மக்களும் உறவுப் பொருளேயொழிய, மாடு வீடுபோல ஒருவன் உடைமைப் பொருள் அல்லர். இவ்வுலக உண்மையை - தமிழ் கண்ட உண்மையை - சமூகவடிப்படையாகக் கொள்ளல் வேண்டும். யாதனின் யாதனின் நீங்கியான் (341) என்ற அஃறிணைச் சுட்டால், பொருள் உடல் உயிர் என்னும் தன்னகத் துறவையே - மனத்துக்கண் பற்று அவிதலையே - ஆசிரியர் முடித்துக் கூறினார்.

இல்லறமும் துறவறமும் முரணுடை ஒழுக்கங்கள் அல்ல; அடிமரமும் பரந்த பெருங்கிளையும் போன்றன. அன்பும் அருளும் சான்றன. அன்பு நீங்கியது அருளன்று; அன்பின் பரப்பே அருளாவது. ஒரு குடும்பம் விடுவது துறவன்று: உலக முழுவதையும்