பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வள்ளுவம்

ஆடுகளத்தின்கண் கலந்துகொள்ப பண்புக் குழு என்றும், நல்லெண்ணக் குழு என்றும், இவ்வாறு ஒரு நாட்டுச் சான்றோர் பிற நாட்டிற்குச் சென்று பழகு.ப. இனைய பல் தொடர்புகளுக்கு விட்டுக் கொடுப்பது இந்நாள் அரசியல்.

கூட்டு நாட்டுப் பேரவை நம் எண்ணத்தின் உரு. உலகத்துப் பல அரசுகளின் இணைப்பு அது. ஞாலமுழுதும் பொதுநலம் காணற்குக் கிளைக்குழுஉக்கள் பலவற்றை இப்பேரவை அமைத்துள்ளது. இவ் வவை காரணமாய் எல்லா நாட்டு அறிஞர்களும் தம்முள் இடையறா உறவு கொள்ப. உலக மருத்துவர்கள். உலகக் கல்வியாளர்கள், உலக அறிவியல் அறிஞர்கள், உலகப் பொருள் அறிஞர்கள், உலக விளையாட்டாளர்கள் என்ற வகையில் எண்ணிலாக் கூட்டங்கள் பற்பல நாடுகளில் நிகழ்கின்றன. முன்னேறிய நாடுகள் இவ்வவை சார்பாக, நலம் தாழ்ந்த நாடுகளுக்கு ஒரளவு முன்வந்து உதவுகின்றன. இரு நாட்டுச் சிக்கலைப் பல நாடுகள் கேட்டுத் தீர்வு கூறும் வாய்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது. போரற்ற உலகவமைதி இப்பேரவையின் பொறுப்பு.

தேர்வு இந்நாள் ஆட்சியின் அடிப்படை. குடிமக்களே நாட்டின் முதல்வர்கள்; ஆட்சித் தலைவனைத் தேர்ந்து எடுத்தற்கு உரியவர்கள். நாட்டுத் தலைமை ஒருவனுக்குப் பிறப்பால் வருவதன்று; மக்கள் தேர்வால் வருவது. கட்சிகள் இஞ்ஞான்று அரசியலுக்கு உறுதுணை. நாட்டின் முழுப் பொறுப்பை ஒரு தனி மகன்மேல் வையாது, பலவாறு பகிர்ந்திடுவது நல்லது என்ற கருத்தால், ஆட்சி யவைகளை அமைத்து, அவற்றுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றோம். சிற்றுார் தோறும் பெருநகரந்தோறும் தேர்வு இயலுவதால், இற்றை ஆட்சி தேர்வாட்சியாகும். அரசாற்றல் பொதுவாக மக்கள்பால் உண்டு: ஒரளவு கூடுதலாக, நாம் பொறுக்கி விடுக்கும் மாற்றாளிகள்பால் உண்டு; சிறப்பாக, அமைச்சர்க்கும் தலைவனுக்கும் உண்டு. இவ்வாறு நாடாட்சியும் பொறுப்பும் எல்லா மக்கள்பாலும் பரவிக்கிடக்கின்றன: ஆதலின், அமைச்சனோ தலைவனோ, தன்னுடைய காரணங்கொண்டு, தன் பகையாளனுக்குப் பெருங் கெடுதலும் தன் நட்பாளனுக்குப் பெருநலமும் எளிதில் செய்துவிட முடியாது. ஊதியம் பெற்றுச் செய்யும் வினையாளர்கள் ஒருபாலாக,